Don't Miss!
- News
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு குட்நியூஸ்! எப்போது?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாலிவுட்டில் விஸ்வரூபமெடுக்கும் பாய்காட்: ‘லைகர்’ படத்தின் நாயகி அனன்யா பாண்டேவின் கருத்து இதுதான்!
மும்பை: பாலிவுட்டில் உருவாகும் படங்கள் தொடர்ந்து பாய்காட் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
நெட்டிசன்களால் பாய்காட் செய்யப்படும் திரைப்படங்கள், சில நேரங்களில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கின்றன.
இந்நிலையில், இந்தி திரையுலகில் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் பாய்காட் பிரச்சினை குறித்து நடிகை அனன்யா பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.
தனுஷ் கிட்ட அத தேடிக்கிட்டு இருக்கேன்.. என்ன சொல்கிறார் அமலாபால்?

விஜய் தேவரகொண்டாவின் நாயகி
இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே 2019ம் ஆண்டு வெளியான 'Student of the Year 2' என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் 3 படங்கள் நடித்த அவர், தற்போது விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ள இத்திரைப்படம், வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸி
'லைகர்' திரைப்படம் அனன்யா பாண்டேவிற்கு மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தீயாக வேலைப் பார்த்து வருகிறார். சமீபத்தில் கூட கரன் ஜோகரின் 'காஃபி வித் கரன்' நிகழ்ச்சியில், விஜய் தேவரகொண்டா உடன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மேலும் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அனன்யா பாண்டே பங்கேற்று வருகிறார்.

பாலிவுட்டில் அதிகரிக்கும் பாய்காட்
இதனிடையே, இந்தியில் வெளியாகும் படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பாய்காட் செய்து வருகின்றனர். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட, தரைத்தட்டிய கப்பலாக கடும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. தற்போது கூட அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படம் கடுமையாக பாய்காட் செய்யப்படுகிறது. இதனால், அமீர் கான் உள்ளிட்ட 'லால் சிங் சத்தா' படக்குழுவினர் அச்சத்தில் உள்ளனர்.

அமீர் கானுக்கு வந்த சோதனையா இது?
'தங்கல்' திரைப்படம் மூலம் இராண்டாயிரம் கோடி ரூபாய் வசூலை தொடங்கி வைத்தவர் அமீர் கான். இந்நிலையில், அமீர் கான், கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா', நாளை (ஆக 11) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே, இந்தப் படம் குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர். இந்திய கடவுள்களையும் இந்து மதத்தையும் அவர் பிகே படத்தில் புண்படுத்திவிட்டார் என்பதே, நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்களாக உள்ளன.

அனன்யா பாண்டே விளக்கம்
இந்நிலையில், அமீர் கானின் 'லால் சிங் சத்தா' உள்ளிட்ட இந்திப் படங்கள் பாய்காட் செய்யப்படுவது பற்றி, அனன்யா பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தினமும் யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் முடிவெடுத்துள்ளனர். இது தொடர்கதையாகி வருவதை பார்க்க முடிகிறது. இதனால் எங்களைப் போன்ற நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுகின்றனர்." எனக் காட்டமாக விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட், டோலிவுட் வித்தியாசமில்லை
தொடர்ந்து கருத்துக் கூறியுள்ள அவர், "இந்தப் பிரச்சினை இந்தியில் மட்டும் இல்லை, டோலிவுட்டிலும் அதிகரித்துள்ளது" என அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். மேலும், 'கலாச்சாரங்களை பொறுத்தவரையில் வடக்கு, தெற்கு என எங்குமே பிளவுகள் இல்லை. எனக்கு எல்லாமே ஒன்றாக தான் தெரிகிறது. ஆனால், மக்கள் தான் குழப்பத்தில் இவ்வாறு பாய்காட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்" என விளக்கமளித்துள்ளார். இதுவொரு மோசமான கலாச்சாரம், கண்டிப்பாக இது மாற வேண்டும் எனவும், அனன்யா பாண்டே விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.