விஜய் 66ல் விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நாயகி... அப்போ ராஷ்மிகா இல்லையா?

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே செம்மையான வரவேற்பு காணப்படுகிறது. தினந்தோறும் அப்டேட் மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டை அவர்கள் கேட்டுவந்த நிலையில் நாளை மறுதினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது. இதனிடையே தளபதி 66 படத்தின் அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

தளபதியின் பீஸ்ட்

தளபதியின் பீஸ்ட்

தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தை வரவேற்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

பீஸ்ட் திருவிழாவிற்கு ரெடி

பீஸ்ட் திருவிழாவிற்கு ரெடி

படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது. கோடிக்கணக்கான வியூஸ்களை கைப்பற்றியுள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து பாடல்கள் மற்றும் படத்தை ட்ரெண்டிங்கிலேயே வைத்துள்ளனர். இன்னும் இரு வாரங்களில் பீஸ்ட் திருவிழாவை கொண்டாட தற்போதே தயாராகி வருகின்றனர்.

ஏப்ரல் 2ல் ட்ரெயிலர் ரிலீஸ்

ஏப்ரல் 2ல் ட்ரெயிலர் ரிலீஸ்

தொடர்ந்து அவர்கள் அப்டேட்களை கேட்டுவந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் டைரக்டர் நெல்சன் இருவருமே அவர்களை திருப்திப்படுத்தி வருகின்றனர். ஆனால் படத்தின் ட்ரெயிலர் வெளியாவதில் தாமதம் இருந்த நிலையில் வரும் ஏப்ரல் 2ம் தேதி ட்ரெயிலர் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் 66 குறித்த அப்டேட்கள்

விஜய் 66 குறித்த அப்டேட்கள்

இந்த பீஸ்ட் மோடில் ரசிகர்கள் தங்களை தொடர்ந்து இணைத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான விஜய் 66 படம் குறித்தும் தொடர்ந்து அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளது. படத்தை வம்சி படிப்பள்ளி இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாராக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

ஹீரோயின் குறித்த எதிர்பார்ப்பு

ஹீரோயின் குறித்த எதிர்பார்ப்பு

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபுவின் மகள், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் ஹீரோயின் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாதது படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

திஷா பதானி நாயகி?

திஷா பதானி நாயகி?

முன்னதாக ராஷ்மிகா மந்தனா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கீர்த்தி சனோன் நாயகியாகவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் தற்போது பாலிவுட் பட நாயகி திஷா பதானி விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப சென்டிமெண்ட் + காதல்

குடும்ப சென்டிமெண்ட் + காதல்

விஜய் 66 படம் வம்சியின் முந்தைய படமான தோழா போன்றே குடும்ப சென்டிமெண்ட் கலந்த காதல் படமாக உருவாகவுள்ள நிலையில், காமெடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கார்த்தி, நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தோழா படம் சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை கவர்ந்த நிலையில், விஜய் 66 படமும் அத்தகைய சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X