»   »  கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனை பாலிவுட் ஜோடிகள் எங்கே கொண்டாட போறாங்க தெரியுமா?

கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனை பாலிவுட் ஜோடிகள் எங்கே கொண்டாட போறாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மனசுக்கு பிடிச்சவங்களோட ஊர்சுற்றுவதுன்னாலே அது தனி சந்தோஷம்தான். எப்போதும் சூட்டிங், ரசிகர்களுக்கு தெரியாமல் தலைமறைவு என பிசியாக வாழ்ந்துவரும் சினிமா நடிகர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும்.

எனவேதான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனில் பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களுக்கு பிடித்தமானவர்களோடு ஊர் சுற்ற கிளம்பிவிட்டனர். ஒவ்வொரு ஸ்டார்களின் டூர் பட்டியல் நமது கைவசம் உள்ளது. அதைப் பார்க்கலாமா?

ஆலியா பட்

ஆலியா பட்

சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஆலியா பட் இருவரும் தங்களது புத்தாண்டை பட்டையை கிளப்பி கொண்டாடப்போகும் இடம் எவர்கிரீன் டூரிஸ்ட் ஸ்பாட்டான, கோவா.

கத்ரினா கைப்

கத்ரினா கைப்

ரன்பீர் கபூர், தனது செல்லம் கத்ரினா கைப்புடன் நியூயார்க்கில், நியூஇயரை வரவேற்க உள்ளாராம். ஏற்கனவே அங்கேயுள்ள குடும்பத்தாருடன் பொழுதை கழிக்க நியூயார்க்கிற்கு, கைப் பறந்துவிட்ட நிலையில், விரைவில் விமானம் ஏற உள்ளார் ரன்பீர் கபூர்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார் மற்றும் அவரது மனைவி டிவிங்கிள் குழந்தைகளோடு ஆல்ரெடி கேப்டவுனில் லேண்ட் ஆகியாச்சு. 10 நாள் தென் ஆப்பிரிக்காவில்தான் குடும்பத்தோடு கும்மாளமாம்.

கரீனா கபூர் ஜோடி

கரீனா கபூர் ஜோடி

சைப் அலிகான் மற்றும் கரீனா கபூர் வழக்கமாக புத்தாண்டை ஸ்விச்சர்லாந்தில் கொண்டாடுவார்கள். வருடந்தோறும் எதிர்பார்த்த வாழ்க்கை அமைந்து வருவதால், இம்முறையும் சென்டிமென்டாக சுவிச்சர்லாந்தில்தான் கொண்டாட்டமாம்.

தவான்-கபூர் ஜோடி

தவான்-கபூர் ஜோடி

வருண் தவான் மற்றும் சாரதா கபூர் இருவரும் லாஸ் வேகாசில் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்க உள்ளனராம்.

பிரபுதேவா

பிரபுதேவா

தமிழ் பிரபலமாகி இப்போது இந்திய பிரபலமாக உள்ள பிரபுதேவா, ஏபிசிடி2 படத்தின் சூட்டிங்கிற்காக லாஸ்வேகாஸ் சென்றுள்ளார். தனது குழந்தைகளையும் அங்கே வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். எனவே குழந்தைகளுடன் லாஸ்வேகாசில் புத்தாண்டை கொண்டாட உள்ளார் .

English summary
Bollywood stars itinerary for this holiday season. Most of them will fly to abroad nations.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil