»   »  மும்பை கற்பழிப்பை கண்டித்து சோனம் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

மும்பை கற்பழிப்பை கண்டித்து சோனம் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள், பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

By Siva
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.

மும்பை சக்தி மில்ஸ் பகுதியில் 22 வயது பத்திரிக்கை புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து மும்பையில் பத்திரிக்கைகாரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.

ஜாக்கர்ஸ் பார்க்

ஜாக்கர்ஸ் பார்க்

மும்பையில் உள்ள ஜாக்கர்ஸ் பார்க்கில் இருந்து ஆம்பிதியேட்டர் கார்டர் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர், ரேஷ்மா டிசோசா, பாடகி சோனா மொஹாபத்ரா, கரன்வீர் பொஹ்ரா, அவரது மனைவி டீஜே சித்து, குஷால் பஞ்சாபி, அபர்ணா பாஜ்பாய், சதீஷ் ரெட்டி, தலிப் தஹ்லில், எம்.எல்.ஏ. பாபா சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேனர்கள்

பேனர்கள்

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கற்பழிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்திச் சென்றனர்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்ட சோனம் கபூர் கூறுகையில், இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது கோழைத்தனமான செயல் என்றார்.

ஊர்வலம்

ஊர்வலம்

ஊர்வலத்தில் கண்டன வாசகங்கள் அடங்கிய பேனரை பிடித்துச் செல்லும் சோனம் கபூர்.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

ஊர்வலத்தில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் சோனம் கபூர் மட்டுமே கலந்து கொண்டார்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

முன்னதாக கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு சோனம் கபூர் மக்களுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

கற்பழிக்காதே

கற்பழிக்காதே

என்னை கற்பழிக்காதே, பாதுகாப்பான மும்பை வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி நிற்கும் பெண்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Whole country is boiling against the photo journalist rape case. Bollywood stars and Journalist staged a silent protest in the heart of Mumbai from Joggers Park to Amphi theatre carter road displaying banner and placards to express their anger following the rape of a 22-year-old woman in an abandoned textile mill in central Mumbai Thursday evening. Bollywood actress Sonam Kapoor, Reshma D’souza, Singer Sona Mohapatra, Karanveer Bohra along with his wife Teejay Sidhu, kushaal Punjabi, Aparnaa Bajpai, Satish Reddy, Actor Dalip Tahil and MLA Baba Siddique joined protest against rape in Mumbai.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more