»   »  என் மனைவி போல என்னை யாராலும் கடுப்பேத்த முடியாது: நடிகர் 'ஓபன் டாக்'

என் மனைவி போல என்னை யாராலும் கடுப்பேத்த முடியாது: நடிகர் 'ஓபன் டாக்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மனைவியை போன்று தன்னை எரிச்சல் அடைய வைப்பவர் வேறு யாரும் இல்லை என்று பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிரிவதும் சகஜமாகிவிட்டது. காதலிக்கையில் உருகி உருகி காதலிக்கிறார்கள். பின்னர் எங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கூறி ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிடுகின்றனர்.

இந்நிலையில் காதல், திருமணம் பற்றி பாலிவுட் திரை நட்சத்திரங்கள் சிலர் மனம் திறந்து பேசியுள்ளனர்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

தொழில் அதிபர் நெஸ் வாடியாவை பிரிந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது யாரோ நல்லவரை காதலிக்கிறாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். விரைவில் தனது காதலர் யார் என்பதை கூறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்

இம்ரான் கான்

நடிகர் இம்ரான் கான் தனது நீண்டநாள் காதலியான அவந்திகாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இம்ரான் தனது மனைவி பற்றி கூறுகையில், என் மனைவியைப் போன்று என்னை கோபம் அடைய வைப்பவர்கள் யாருமே இல்லை. நாங்கள் அடிக்கடி சண்டை போடுவோம், சமாதானம் ஆவோம் என்றார்.

பிபாஷா

பிபாஷா

நடிகை பிபாஷா பாசு தனது காதலரான ஹர்மன் பவேஜாவை பிரிந்துள்ளார். ஒன்றாக இருந்து வருந்துவதை விட பிரிந்து செல்வது நல்லது. நானும் ஹர்மனும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது. எங்களுக்குள் ஒத்து வராது என்கிறார் பிப்ஸ்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

தீபிகா படுகோனேவின் காதலரான ரன்வீர் சிங் வெளிப்படையாக பேசுவதற்கு பெயர் போனவர். தன்னால் செக்ஸ் இல்லாமல் இருக்கவே முடியாது என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி இல்லை பேரதிர்ச்சி அடைய வைத்தவர்.

ராஜ்குமார் ராவ்

ராஜ்குமார் ராவ்

தேசிய விருது பெற்ற இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் ஒரு இரவு மட்டும் ஒரு பெண்ணுடன் இருப்பதற்கு பெயர் போனவர். ஆனால் தான் தற்போது அப்படி எல்லாம் இல்லை என்றும், தனது காதலி பத்ரலேகாவை உயிருக்கு உயிராக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood stars have talked about love and relationships.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil