»   »  ஸ்ரீதேவி மகள் தொடங்கி அமிதாப் பேத்தி வரை... பாலிவுட்டின் "அடுத்த வாரிசுகள்" ரெடி!

ஸ்ரீதேவி மகள் தொடங்கி அமிதாப் பேத்தி வரை... பாலிவுட்டின் "அடுத்த வாரிசுகள்" ரெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது பெரிய விஷயமில்லை. தமிழில் கார்த்திக், பிரபு தொடங்கி கவுதம் கார்த்தி, விக்ரம் பிரபு வரை வாரிசுகள் நடிப்பில் கோலோச்சி வருகின்றனர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்கள் வரை நடிகர், நடிகைகளின் வாரிசுகள் நடிக்க வரவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே மாறி விட்டது.

அந்த வகையில் அடுத்ததாக பாலிவுட் உலகை ஆளக் காத்திருக்கும் வாரிசுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஜான்வி(18)

ஜான்வி(18)

மயிலுவாக தமிழ் சினிமாவைக் கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மகள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய ஹீரோக்கள் முயற்சி செய்தும் யாருக்கும் பிடிகொடுக்காமல் மகளை பாதுகாத்துக் கொண்டார் ஸ்ரீதேவி. தற்போது பாலிவுட்டில் தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஜானவியை தன்னுடைய படத்தில் அறிமுகம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்யன்(18)

ஆர்யன்(18)

ஷாரூக்கான் - கௌரி தம்பதிகளின் மூத்த மகன் ஆர்யனை விரைவில் பாலிவுட் சினிமாக்களில் பார்க்க முடியும் என்று கூறுகின்றனர். தம்பி ஆப்ரகாமை தலைகீழாகப் பிடித்தது, அமிதாப் பேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்தது என்று அடிக்கடி சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார் ஆர்யன். 18 வயதான ஆர்யனை ஷாரூக் விரைவில் நாயகனாக அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாரா அலிகான்(22)

சாரா அலிகான்(22)

சைப் அலிகான் - அம்ரிதா சிங் தம்பதிகளின் மகளான சாரா அலிகானும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். 22 வயதான சாரா மற்றும் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கத்தார் இருவரையும் ஒருசேர தயாரிப்பாளர் கரண் ஜோகர் அறிமுகம் செய்யவிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நவ்யா நவேலி(18)

நவ்யா நவேலி(18)

ஆர்யனுடன் ஜோடியாக சர்ச்சைகளில் சிக்கிய நவ்யா நவேலியும் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். தாத்தா அமிதாப் பச்சன், மாமா அபிஷேக், அத்தை ஐஸ்வர்யா போல நவ்யாவும் திரையுலகில் பிரகாசிப்பார் என்பது பாலிவுட்டினரின் எண்ணமாக உள்ளது. அந்த நம்பிக்கையை நவேலி காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.

English summary
Sources Said Sridevi Daughter Jhanvi, Saif Ali Khan and Amrita Singh's daughter Sara, Amitabh Bachchan's granddaughter Navya Naveli and Shah Rukh Khan's son Aryan are also likely to join Bollywood soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil