»   »  'தங்கமகன்' மாரியப்பனுக்கு பாலிவுட் ரூ.10 லட்சம் பரிசு: அப்ப கோலிவுட்? #vishal

'தங்கமகன்' மாரியப்பனுக்கு பாலிவுட் ரூ.10 லட்சம் பரிசு: அப்ப கோலிவுட்? #vishal

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழன் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

பிரேசிலின் ரியோடிஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்கவில்லை. இருப்பினும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சிந்து மற்றும் சாக்ஷி மாலிக்கை இந்தியர்கள் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தான் அதே ரியோடிஜெனீரோவில் நடந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் உயரும் தாண்டும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

உலக அரங்கில் பெருமை தேடித் தந்த தங்கத் தமிழன் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த பரிசுத் தொகை வறுமையால் வாடும் மாரியப்பனின் குடும்பத்திற்கு பேருதவியாக அமைந்துள்ளது.

பாலிவுட்

பாலிவுட்

மாரியப்பனை ஊக்குவிக்கும் வகையாக அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ். மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மற்ற இந்தியர்களுக்கும் அந்நிறுவனம் பரிசுத் தொகை வழங்க உள்ளது.

யஷ்ராஜ் பிலிம்ஸ்

யஷ்ராஜ் பிலிம்ஸ்

விளையாட்டு தொடர்பான படங்களை தயாரிப்பதில் யஷ்ராஜ் பிலிம்ஸ் ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. சக் தே இந்தியா, சுல்தான் படங்களை தயாரித்த யஷ்ராஜ் பிலிம்ஸ் மாரியப்பனை பாராட்ட முந்திக் கொண்டுள்ளது.

கோலிவுட்

கோலிவுட்

தமிழ் திரையுலகினர் மாரியப்பனுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்ததோடு நின்றுவிட்டனர். பாலிவுட்டை போன்று கோலிவுட்டும் மாரியப்பனை பாராட்டி பரிசுத் தொகை வழங்குமா?

English summary
Bollywood's popular producton house Yash Raj Films has announced Rs. 10 lakh cash rewad for paralympian Mariyappan Thangavelu. What about Kollywood?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil