twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசத்துரோக வழக்கு.. நடிகை கங்கனா, அவர் சகோதரியை விசாரிக்க, நீதிமன்றம் இடைக்கால தடை!

    By
    |

    மும்பை: நடிகை கங்கனாவை போலீசார் விசாரணைக்கு அழைக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

    நடிகை கங்கனாவும் அவர் சகோதரி ரங்கோலியும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இவர்களுடைய கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையாகி பிரச்சனையாக மாறிவிடுகிறது.

    இரு சமூகத்தினர்

    இரு சமூகத்தினர்

    வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் மீது கர்நாடகாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்குப் பதிவு

    வழக்குப் பதிவு

    நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது மும்பை பாந்திரா போலீசார் தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து இருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இந்நிலையில் கடந்த 8- ஆம் தேதி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யகோரி கங்கனாவும் ரங்கோலியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மேலும் 3 நாட்கள்

    மேலும் 3 நாட்கள்

    மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், நடிகை கங்கனாவிடம் மேலும் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றார். இதையடுத்து நீதிமன்றம் விசாரணையை 25- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதுவரை கங்கனா மற்றும் ரங்கோலியை விசாரணைக்கு அழைப்பது, கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடைவிதித்தது.

    English summary
    The Bombay High Court extended the interim protection granted to Kangana and her sister Rangoli till January 25 in a case where they are charged with sedition and promoting hatred and outrage among communities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X