»   »  சென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல- பாம்பே ஜெயஸ்ரீ

சென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல- பாம்பே ஜெயஸ்ரீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "சென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல" என்று சிறந்த பின்னணிப்பாடகிகளில் ஒருவரான பாம்பே ஜெயஸ்ரீ தெரிவித்து இருக்கிறார்.

டிசம்பர் மாதம் வந்தாலே சென்னையில் இசைக்கச்சேரி களைகட்டும். சபாக்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு பாடகர் அல்லது பாடகியின் பாட்டுக்கச்சேரி, வயலின் வாசிப்பு ஆகியவை அரங்கேறிக்கொண்டிருக்கும்.

ஆனால் இந்த வருடம் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. சென்னையில் கொட்டித் தீர்த்த மழை சென்னைவாசிகளை மிகவும் பாதித்து விட்டது.

Bombay Jayashri Cancelled Music Concerts

இதனால் டிசம்பர் மாதத்தில் அரங்கேறும் மார்கழிக் கச்சேரிகளை இந்த வருடம் நினைத்து கூடப் பார்க்கமுடியவில்லை. இந்நிலையில் பிரபல பின்னணிப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தனது இசை நிகழ்ச்சிகளை முழுவதும் ரத்து செய்து விட்டதாக அறிவித்திருக்கிறார்.

Dear Freinds and Rasikas, I have cancelled my concerts this Margazhi season. Chennai, which has always supported art, is...

Posted by Bombay Jayashri Ramnath on Sunday, December 6, 2015

இதைப் பற்றி அவர் கூறும்போது " எனது அன்பு நண்பர்கள் மற்றும் ரசிகர்களே இந்த வருடம் மார்கழி இசைக்கச்சேரியை நான் ரத்து செய்து விட்டேன். சென்னை எப்போதும் கலைகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய ஒரு நகரம்.

ஆனால் இந்த வருடம் பெய்த மழையால் சென்னை தற்போது போராடி வருகிறது. மீட்புக் குழுவினரும், தன்னார்வலர்களும் இரவு, பகல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நிறைய மக்கள் வீடுகளை இழந்து அடிப்படைத் தேவைகளுக்கு போராடி வருகின்றனர். நான் நினைக்கிறேன் இது சென்னையின் பண்டிகைக்கான நேரமல்ல.

சென்னை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது மார்கழி மாத இசைக் கச்சேரிகள் நடைபெறும்" என்று பாம்பே ஜெயஸ்ரீ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Singer Bombay Jayashri Says "Dear Freinds and Rasikas, I have cancelled my concerts this Margazhi season. Chennai, which has always supported art, is now battling the aftermath of torrential rains. rescue teams and volunteers are working day and night ! With so many people homeless and struggling for basic needs , I feel it is not the time for festivals . I sincerely hope the resources and energies used to back the December festival are channelised to help Chennai get back to normalcy".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more