விஜய் 10 லட்சம் எல்லாம் கொடுக்கல.. வடிவேலு போன்ல கூட விசாரிக்கல.. போண்டா மணி வருத்தம்!
சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டா மணி மாற்று சிறுநீரகத்திற்காக தனது வீட்டில் ஓய்வெடுத்து காத்திருக்கிறார்.
போண்டா மணியின் இந்த மோசமான நிலையை அறிந்த நடிகர் விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் தலா ஒரு லட்சம் ரூபாயை அவருக்கு வழங்கினர்.
ஆனால், உதவி செய்வதாக சொன்ன நடிகர் வடிவேலு இன்னமும் ஒரு போன் கூட பண்ணி பேசவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் போண்டா மணி.

வடிவேலு வாக்கு என்னாச்சு
வடிவேலுவின் பல படங்களில் துணை காமெடியனாக நடித்து பிரபலமானவர் போண்டா மணி. சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகம் செயலிழந்த நிலையில், அவருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என வாக்கு கொடுத்த நிலையில், இன்னமும் அவர் எந்த உதவியும் செய்யவில்லையா? என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு நொந்து போய் போண்டா மணி பதில் அளித்துள்ளார்.

போனில் கூட விசாரிக்கல
சினிமாவில் நடிக்கும் போதே ஒரு 500 ரூபாய் காசு தருவதற்கு கூட வடிவேலு அப்படி யோசித்து தர மாட்டார். இதுவரை ஒரு போன் கூட பண்ணி என்ன ஆச்சு எப்படி இருக்கன்னு விசாரிக்காதது ரொம்பவே வருத்தமாக இருக்கு. ஆனால், வடிவேலு மூலமாகத்தான் இந்த அளவுக்கு நான் வெளியே தெரிந்தேன் அவர் உதவவில்லை என்றாலும் வருத்தமில்லை எனக் கூறியுள்ளார்.

விவேக் இருந்திருந்தால்
நடிகர் விவேக் இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு இப்படியொரு நிலைமையே ஏற்பட்டு இருக்காது. எந்த நடிகரிடமும் கையேந்தும் நிலைக்கே கொண்டு சென்றிருக்க மாட்டார். விஜயகாந்தும் பழையபடி இருந்தா கூட எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்றும் உருக்கமாக பேசினார் போண்டா மணி.

விஜய் 10 லட்சம் தரல
யூடியூபில் தேவையில்லாமல் நடிகர் விஜய் 10 லட்சம் கொடுத்ததாக வதந்திகள் பரவி வருகின்றன. நடிகர் விஜய் எந்த காசும் தரல. விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் எந்த உதவியும் பண்ணல. அவர்கள் பண்ண வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. தனுஷ், விஜய்சேதுபதி மற்றும் விஜய்சேதுபதியின் நண்பர் தலா ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்ததை என்னைக்கும் மறக்கவே மாட்டேன். எனக்காக வேண்டிக்கிட்ட, எனக்காக உதவி செய்த அத்தனை பேருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார் போண்டா மணி.


Click it and Unblock the Notifications











