இன்று மாலை வலிமை டிரைலர்... போனி கபூர் மீது உச்சகட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
சென்னை : அஜித்தின் வலிமை டிரைலர் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஷாக் ஒன்றையும் கொடுத்துள்ளார். போனி கபூரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த கொந்தளிப்பில் உள்ளனர் .
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய, மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாற்ற தயாரிப்பாளர் போனி கபூர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிடுவதை போலவே உலகின் மற்ற நாடுகளிலும் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வலிமை
இதன் காரணமாக உலகின் பல நாடுகளிலும் வலிமை படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஜப்பான், மலேசியா, ஃபின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வலிமை படம் பிப்ரவரி 25 ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கூட வலிமை டிக்கெட் ஒப்பனிங் துவங்கப்படாத நிலையில் ஜப்பானில் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் துவங்கி விட்டது.

டிரைண்டிங்கில் வலிமை
இந்நிலையில் வலிமை ரிலீசை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக ட்விட்டரில் #Valimai, #AjithKumar ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகின்றன. படத்தின் அடுத்த அப்டேட்டை எப்போது வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அனைவரையும் அதிர வைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.

இன்று வலிமை டிரைலர்
ட்விட்டரில் போனி கபூர் வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்று மாலை 6.30 மணிக்கு அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. தெலுங்கு டிரைலரை மகேஷ்பாபுவும், கன்னட டிரைலரை கிச்சா சுதீப்பும், இந்தி டிரைலரை அஜய் தேவ்கனும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் டிரைலர் வருமா வராதா என்பது பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அப்போ தமிழில் இல்லையா
இதனால் ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர். மற்ற மொழிகளில் வெளியிடும் போது ஏன் தமிழில் மட்டும் வெளியிடவில்லை. அதை எப்போது வெளியிடுவார்கள். ஏன் போனி கபூர் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











