தலைவர் 170 ஐ நான் தயாரிக்கவில்லை... வதந்திகளுக்கு என்ட்கார்டு போட்ட போனி கபூர்
சென்னை : ரஜினியின் 170 வது படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் வெளியான தகவலை போனி கபூர் மறுத்துள்ளார். அதோடு இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் போனி கபூர்.
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதிகம் எதிர்பார்ப்படும் படமாக இருக்கும் அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி, அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களை தயாரித்து வருகிறார்.

வலிமை ரிலீஸ் ஏற்பாடுகள்
வலிமை படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதோடு ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை மார்ச் 9 ம் தேதியில் இருந்து துவக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். அதோடு வலிமை படத்தின் ப்ரோமோஷனிற்காக தினம் ஒரு வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகிறார் போனி கபூர். ரசிகர்கள் விரும்பினால் வலிமை 2 படத்தையும் உருவாக்க உள்ளதாக கூறி உள்ளார்.

தலைவர் 170 டைரக்டர் இவரா
ரஜினியின் 169 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அருண்ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார்.

முதல் ஆளாக நானே சொல்கிறேன்
இந்நிலையில் தலைவர் 170 படத்தை தான் தயாரிக்க உள்ளதாக வெளியான தகவலை போனி கபூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், ரஜினியும் நானும் நீண்ட காலமாக நல்ல நண்பர்கள். அடிக்கடி சந்தித்து எங்களின் ஐடியாக்களை பகிர்ந்து கொள்வோம். ஒருவேளை நாங்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக முடிவு செய்தால் முதல் ஆளாக நானே அதனை அறிவிக்கிறேன். நீங்களாக உங்களின் கருத்துக்களை கசிய விட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

எதை தான் நம்புவது
தலைவர் 170 பற்றிய தகவலால் இன்ப அதிர்ச்சி அடைத்திருந்த ரசிகர்கள், யார் பார்த்த வேலை இது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத வரை எந்த ஒரு தகவலையும் நம்ப முடியாது போலிருக்கே. போனி கபூர் பெயரிலேயே பல போலி ட்விட்டர் கணக்குகள் இருப்பதாக கூறப்படுவதால் எதை நம்புவது என்றே தெரியவில்லையே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











