ஏகே 61 டைட்டில் - ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி இதுதான்...சென்டிமென்டை விடாத போனி கபுர்

சென்னை : கடந்த சில நாட்களாகவே அஜித் ஐரோப்பாவில் டுர் போன போட்டோக்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றன. அஜித்தின் ஒவ்வொரு போட்டோவும் வைரலாகி வருகிறது.

ஐரோப்பா டுரை முடித்துக் கொண்டு இம்மாத இறுதியில தான் அஜித் இந்தியா திரும்ப உள்ளாராம். அவர் வந்த பிறகு தான் புனேவில் பிளான் செய்திருக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.

புனேவில் நடக்கும் ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று நடிக்க போகிறார்களாம். புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தள்ளிபோகும் ஏகே 61 ரிலீஸ்

தள்ளிபோகும் ஏகே 61 ரிலீஸ்

ஏகே 61 படத்தின் 80 சதவீதம் வேலைகள் முடிக்கப்பட்டு விட்டதால் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பருக்கு ரிலீசை தள்ளி வைத்துள்ளார்களாம். கிறிஸ்துமஸ் வார இறுதி நாளில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம்.

டைட்டில் இந்த தேதியின் தான் ரிலீஸ்

டைட்டில் இந்த தேதியின் தான் ரிலீஸ்

இதனால் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படலாம் என தகவல் பரவி வந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி ஆகஸ்ட் 13 ம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட தான் தயாரிப்பாளர் போனி கபுர் திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 13 ம் தேதி தான் மறைந்த தனது மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள்.

இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா

இதுக்கு பின்னால இப்படி ஒரு காரணமா

அஜித்திற்கும் ஸ்ரீதேவி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதனால் தான் ஸ்ரீதேவி கேட்டதும் அவரின் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தாராம். ஸ்ரீதேவியின் மறைவிற்கு முன் போனி கபுர் தயாரிப்பில் 3 படங்களில் நடிப்பதாக அஜித், ஸ்ரீதேவிக்கு வாக்குறுதி அளித்தாராம். அதை காப்பாற்ற தான் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 ஆகிய படங்களில் நடிக்க கையெழுத்திட்டாராம்.

போனி கபுரின் சென்டிமென்ட்

போனி கபுரின் சென்டிமென்ட்

மனைவி மீதான பாசம் காரணமாக தான் ஸ்ரீதேவியின் இறந்த நாளான பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்தாராம் போனி கபுர். தற்போதும் மனைவி சென்டிமென்ட் காரணமாக தான் ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

Recommended Video

AjithKumar | எதிரே வந்த பெண், Thala செய்த காரியம்! நெகிழும் ரசிகர்கள் *Kollywood | Filmibeat Tamil
3 படங்களிலும் சென்டிமென்ட்

3 படங்களிலும் சென்டிமென்ட்

போனி கபுர் மற்றும் ஸ்ரீதேவி மீதான மரியாதை காரணமாக அஜித்தும் போனி கபுரின் இந்த சென்டிமென்ட் தேதியில் டைட்டிலை ரிலீஸ் செய்ய ஓகே சொல்லி விட்டாராம். வலிமை, ஏகே 61 படத்திற்கு மட்டுமல்ல நேர்கொண்ட பார்வை படத்தின் அறிவிப்பையும் பிப்ரவரி மாதம் தான் போனி கபுர் வெளியிட்டார். அந்த படம் ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X