»   »  மறைந்த ஶ்ரீதேவி நினைவாக போனி கபூர் செய்யப்போகும் வேலை!

மறைந்த ஶ்ரீதேவி நினைவாக போனி கபூர் செய்யப்போகும் வேலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஶ்ரீதேவி நினைவாக போனி கபூர் செய்யப்போகும் வேலை!- வீடியோ

மும்பை : இந்தியத் திரையுலகத்தில் முடிசூடா ராணியாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய் சென்றிருந்தபோது காலமானார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சுமார் 50 ஆண்டுகள் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தியவர் ஶ்ரீதேவி.

ஶ்ரீதேவியின் வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரிக்க அவரது கணவர் போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம். யார் இந்தப் படத்தை இயக்குவது என்பது இனிமேல் தான் முடிவாகும்.

ஶ்ரீதேவி மறைவு

ஶ்ரீதேவி மறைவு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகத்தை ஆட்சி செய்து பின், இந்தி திரையுலகத்திலும் தனி ராணியாக விளங்கினார் ஶ்ரீதேவி. அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.

பல்வேறு கேரக்டர்கள்

பல்வேறு கேரக்டர்கள்

சுமார் 50 ஆண்டுகள் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தியவர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரும் பல தடங்கல்களைக் கடந்துதான் நம்பர் 1 இடத்திற்கு வந்தார்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

ஸ்ரீதேவி மறைந்ததுமே அவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாகத் தயாரிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க யாருக்குமே தகுதியில்லை என்று சொன்னார்.

போனி கபூர்

போனி கபூர்

ஆனாலும், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் ஸ்ரீதேவி பற்றி ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீதேவியைப் பற்றிய பல தகவல்களோடு டாகுமென்ட்ரி படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

English summary
Sridevi's husband Boney Kapoor is planning to make sridevi's life in the film. Boney kapoor to produce a documentary film about sridevi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil