மிரட்டலாக வந்த வலிமை டிரைலர்... இந்தி, தெலுங்கு, கன்னடத்தில் ஒரே சமயத்தில் ரிலீஸ்

சென்னை : அஜித்தின் வலிமை படத்திற்கான பிற மொழி டிரைலர்கள் இன்று வெளியிடப்பட்டது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய, மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாற்ற தயாரிப்பாளர் போனி கபூர் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிடுவதை போலவே உலகின் மற்ற நாடுகளிலும் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் வலிமை

உலகம் முழுவதும் வலிமை

இதன் காரணமாக உலகின் பல நாடுகளிலும் வலிமை படம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஜப்பான், மலேசியா, ஃபின்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வலிமை படம் பிப்ரவரி 25 ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கூட வலிமை டிக்கெட் ஒப்பனிங் துவங்கப்படாத நிலையில் ஜப்பானில் ஏற்கனவே டிக்கெட் புக்கிங் துவங்கி விட்டது.

டிரெண்டிங்கில் வலிமை

டிரெண்டிங்கில் வலிமை

இந்நிலையில் வலிமை ரிலீசை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக ட்விட்டரில் #Valimai, #AjithKumar ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் டாப்பில் இருந்து வருகின்றன. படத்தின் அடுத்த அப்டேட்டை எப்போது வெளியிட போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

மிரட்டிய வலிமை டிரைலர்

மிரட்டிய வலிமை டிரைலர்

அதே போல்அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலர் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. தெலுங்கு டிரைலரை மகேஷ்பாபுவும், கன்னட டிரைலரை கிச்சா சுதீப்பும், இந்தி டிரைலரை அஜய் தேவ்கனும் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். அதே சமயம் தமிழில் மட்டும் டிரைலர் வெளியிடப்படாததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அப்போ தமிழில் இல்லையா

அப்போ தமிழில் இல்லையா

இதனால் ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர். மற்ற மொழிகளில் வெளியிடும் போது ஏன் தமிழில் மட்டும் வெளியிடவில்லை. அதை எப்போது வெளியிடுவார்கள். ஏன் போனி கபூர் அது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X