போனி கபூர் எதற்கு இப்படி ஒரு ட்வீட் போட்டார்...அப்படி என்ன நடந்தது ?

சென்னை : நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலரை வெளியிட்ட போனி கபூர் போட்ட ட்வீட், அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் எதற்காக இப்படி ஒரு ட்வீட்டை போட்டுள்ளார், அப்படி என்ன நடந்தது என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

தமிழில் அரசில், போலீஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம். உதயநிதி முதல் முறையாக போலீஸ் கெட்அப்பில் நடித்துள்ள படம். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்

இந்தியில் 2019 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரும், உதயநிதியின் தாத்தாவுமான மு.கருணாநிதி எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தின் டைட்டிலேயே உதயநிதி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரைலர், பாடல் ரிலீஸ்

டிரைலர், பாடல் ரிலீஸ்

2021 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படம் 2022 ம்ஆண்டு மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது.

ரசிகர்களை ஏமாற்றிய போனி கபூர்

ரசிகர்களை ஏமாற்றிய போனி கபூர்

இன்று மாலை 6.30 மணிக்கு டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படும் என போனி கபூர் அறிவித்திருந்தார். ஆனால் அறிவித்ததை போல் அவர் டிரைலரை வெளியிடாததால் ரசிகர்கள் செம அப்செட் ஆகினர். டிரைலர் பிரைவேட்டாக வெளியிடப்பட்டதால் அவற்றின் லிங்குகள் ஓப்பன் ஆகாததால் ரசிகர்கள் கடுப்பாகி போனி கபூரை திட்டி தீர்த்தனர். அதே சமயம் சென்னையில் நடந்த விழாவில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது.

எதற்காக இப்படி ஒரு ட்வீட்

எதற்காக இப்படி ஒரு ட்வீட்

சிறிது நேரத்திலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் நெஞ்சுக்கு நீதி டிரைலரை வெளியிட்ட போனி கபூர், இது எங்கள் வேறுபாடுகளைப் பற்றிய அல்ல. இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது பற்றியது என ட்வீட் போட்டார். இந்த ட்வீட் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அப்படி என்ன நடந்தது. எதற்காக இவர் இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார் என பலரும் குழப்பத்துடன் கேட்டு வருகின்றனர்.

அப்படி என்ன நடந்தது

அப்படி என்ன நடந்தது

இதற்கிடையில், போனி கபூருக்கும் உதயநிதிக்கும் ஏதோ மோதல், மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் டிரைலரை சொன்னபடி வெளியிடவில்லை என்று வதந்தி கிளம்பி உள்ளது. அதனால் தான் போனி கபூர் அப்செட்டாக இப்படி ஒரு ட்வீட் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் போனி கபூர் போட்டுள்ள ட்வீட் நிஜமாகவே கருத்து வேறுபாடு இருப்பதை போல் காட்டுவதாகவும் சிலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X