»   »  ஸ்ரீதேவி கணவரால் மறக்கவே முடியாத அந்த 15 நிமிடம் #Sridevi

ஸ்ரீதேவி கணவரால் மறக்கவே முடியாத அந்த 15 நிமிடம் #Sridevi

Posted By:
Subscribe to Oneindia Tamil
துபாயில் ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன?- வீடியோ

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரால் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 5.45 மணி வரையிலான அந்த 15 நிமிடங்களை இனி மறக்கவே முடியாது.

கணவர் போனி கபூரின் சகோதரியின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றார். மூத்த மகள் ஜான்விக்கு ஷூட்டிங் இருந்ததால் இளைய மகள் குஷியை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மும்பை

மும்பை

ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடல் தனி விமானம் மூலம் இன்று மதியம் 3.30 மணிக்கு துபாயில் இருந்து கிளம்பி இரவு 7 மணிக்கு மும்பையை வந்தடைகிறது.

துபாய்

துபாய்

திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் மும்பை வந்துவிட்டார். மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் சனிக்கிழமை மாலை துபாய்க்கு சென்றுள்ளார்.

பேச்சு

பேச்சு

மாலை 5.30 மணி அளவில் போனி கபூர் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார். அதன் பிறகு இருவரும் 15 நிமிடங்கள் பேசியுள்ளனர். டின்னருக்கு வெளியே செல்ல தயாராகி வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததை தான் போனி பார்த்தார்.

பயணம்

பயணம்

மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க போனி கபூர் துபாய் சென்றதால் தான் அவரால் ஸ்ரீதேவியை கடைசியாக உயிருடன் பார்க்க முடிந்தது. ஸ்ரீதேவியின் உயிர் போகும் முன் அவர்கள் பேசிய அந்த 15 நிமிடங்களை அவரால் இனி மறக்க முடியாது.

English summary
Boney Kapoor went to Dubai to give a surprise to his wife Sridevi. Boney and Sridevi chatted for 15 minutes before she went to the washroom. She was found dead in the bathroom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil