»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னுடைய வாழ்க்கை மற்றும் திரைப்பட அனுபவங்களை "தேடல்" என்ற புத்தகமாகத் தொகுத்துஎழுதியுள்ளார்.

இயக்குநராகத் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் நடிகராகவும் உயர்ந்தவர் பாண்டியராஜன்.

அவர் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமானசம்பவங்களையும் "பாக்யா" வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.

"தேடல்" என்ற தலைப்பில் வெளிவந்த பாண்டியராஜனின் அனுபவங்கள் தற்போது புத்தகமாகத்தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கவியரசு வைரமுத்து புத்தகத்தைவெளியிட, இயக்குநரும் நடிகரும் பாண்டியராஜனின் குருவுமான பாக்யராஜ் அதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டவர்கள்கலந்து கொண்டனர். இறுதியில் பாண்டியராஜன் ஏற்புரை ஆற்றி நன்றி தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil