»   »  புக்மைஷோவில் 24 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த 10 லட்சம் டிக்கெட்: பாகுபலி 2 புதிய சாதனை

புக்மைஷோவில் 24 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த 10 லட்சம் டிக்கெட்: பாகுபலி 2 புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புக்மை ஷோ இணையதளத்தில் பாகுபலி 2 படத்திற்கான புக்கிங் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.


ஆன்லைனில் ஒரு வாரத்திற்கான டிக்கெட் புக்காகிவிட்டது.


புக்மைஷோ

புக்மைஷோ

புக்மைஷோ இணையதளத்தில் வட இந்தியாவில் பாகுபலி 2 புக்கிங் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.


பாகுபலி 2

பாகுபலி 2

புக்மைஷோவில் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையான ஆமீர் கானின் தங்கல் பட சாதனையை பாகுபலி 2 முறியடித்துள்ளது. தங்கலை விட 45 சதவீதம் கூடுதல் டிக்கெட்டுகள் விற்றுள்ளது.


புக்கிங்

புக்கிங்

சிங்கிள் ஸ்கிரீன் உள்ள தியேட்டர்களில் ஏப்ரல் 22ம் தேதியும், மல்டிபிளக்ஸுகளில் 24ம் தேதியும் புக்கிங் துவங்கியது. இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் சேர்த்து 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது.


தென்னிந்தியா

தென்னிந்தியா

புதன்கிழமை தான் தென்னிந்தியாவில் பாகுபலி 2 டிக்கெட் புக்கிங் துவங்கியது. ஆனால் தென்னிந்தியாவில் புக்மைஷோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் வட இந்தியா அளவுக்கு டிக்கெட் விற்பனையாகவில்லை.


English summary
BookMyShow has sold 1 million tickets of magnum opus Baahubali 2 within 24 hours in north India.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil