Just In
- 6 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 6 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து... நடுரோட்டில் தள்ளாடிய நடிகர் சக்தி கைது!

சென்னை : இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி மதுபோதையில் கார் ஓட்டி மற்றொரு கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் பி.வாசு. இவரது மகன் சக்தி தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட இவர், விமர்சனத்துக்கு ஆளானார்.
ஓவியாவுடன் சண்டை, காயத்ரியுடன் சேர்ந்து அவர் பல பிரச்சினைகளில் ஈடுபட்டது என பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல சர்ச்சைகளில் சிக்கினார் அவர்.
2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

காரில் பயணம்
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் வசித்து வரும் சக்தி, நேற்று மதியம் சூளைமேடு இளங்கோவடிகள் தெருவில் தனது நண்பர் ஒருவரைப் பார்க்க தனது சொகுசு காரில் சென்றிருந்தார். அப்போது அவருடன் நண்பர் ஒருவரும் சென்றுள்ளார்.

கார் விபத்து
குறுகிய சாலை ஒன்றில் சென்ற போது, சக்தியின் கார் முன்னால் சென்ற செல்வம் என்பவரது ஆல்டோ கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் செல்வத்தின் காருக்கு சேதம் ஏற்பட்டது.

போலீசில் புகார்
ஆனால் விபத்தை ஏற்படுத்திய சக்தி, தனது காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் அவரது காரை சுற்றி வளைத்து பிடித்தனர். காருக்குள் நடிகர் சக்தி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், விபத்து தொடர்பாக சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடிபோதையில் தள்ளாடிய சக்தி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து ஏற்படுத்திய போது சக்தி மது போதையில் கார் ஓட்டியதைக் கண்டுப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் சூளைமேடு போலீசார். பின்னர் அண்ணா நகர் அழைத்துச் செல்லப்பட்ட சக்தி மது அருந்தியது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.

சக்தி கைது
ஆனால், காரை விட்டு இறங்க மறுத்து போலீசாருடன் ரகளை செய்துள்ளார் சக்தி. பின்னர் அவரை சமாதானப்படுத்தி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடமிருந்த கார், லைசென்ஸ், காரின் சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஐபிசி மீது பிரிவு 279 மற்றும் மோட்டார் வாகனச்சட்டம் 185-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சக்தியும் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சொந்த ஜாமீனில் சக்தி விடுவிக்கப்பட்டார்.

லைசன்ஸ் ரத்து
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதத்தை கட்டி காரை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் சக்தியிடம் கூறியுள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அவரது ஓட்டுநர் உரிமம் ஆறுமாதம் ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது.

தோழி காயத்திரி
ஏற்கனவே, சொகுசு காரை ஓட்டி பல திரையுலகப் பிரபலங்கள் விபத்தை ஏற்படுத்தி பிரச்சினையில் சிக்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் சக்தியின் நெருங்கிய தோழியாக வலம் வந்த நடன இயக்குனர் காயத்திரியும் இதேபோன்று குடித்துவிட்டு கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். நடிகர் சக்தியும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.