போஸ் வெங்கட்டின் அடுத்த பட அப்டேட்.. உறியடி விஜயகுமார் நடிக்கிறார் !
சென்னை: கன்னி மாடம் வெற்றித் தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் அடுத்த படத்தின் அப்டெட் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் போஸ் வெங்கட். இவர் மெட்டி ஒலி என்ற சிரியல் மூலம் தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் போஸ் வெட்கட். இந்த சீரியலில் மூத்த மருமகனாக அமைந்த அந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பல தமிழ்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். தலைநகரம் படத்தில் பாலுவாகவும், கோ படத்தில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். மேலும், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த கவண். இப்படத்தில், தீரன் மணியரசு என்ற வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த கதாபாத்திரம் மிகவும் பேசுப்பாடியாக இருந்தது.
போஸ் வெங்கட் தனக்கென்று ஒரு தனி அடையாளம் மற்றும் தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது, இவர் கன்னிமாடம் படம் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் திரை பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல் பிரமுகர்கள், சாமானிய மக்கள் என என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக இருந்தது.
கன்னிமாடம் வெற்றியைத் தொடர்ந்து அதே வேகத்துடனும் உற்சாகத்துடனும் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. உறியடி விஜயகுமார், பசுபதி நடிக்கும் இப்படத்தை போஸ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு பாஸ்கர் சக்தி வசனம், திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்க உள்ளார். ஒரு கிராமத்தில் நடக்கும் கதை, அதில் கிரிக்கெட் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை கூறும் படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் படத்தை போலவே இரண்டாவது படத்திலும் போஸ் வெங்கட் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது.


Click it and Unblock the Notifications











