பாஸ் என்கிற பாஸ்கரன் பார்ட் 2 வர போகுது...நயன்தாரா நடிப்பாரா?

சென்னை : 2010 ம் ஆண்டு டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன். முழு நீள காமெடி படமாக இந்த படம் எடுக்கப்பப்டது. ஆர்யா - நயன்தாரா காம்போ, தல தளபதி ரோலில் நடித்த சந்தானத்தின் காமெடி ஆகியன படத்தை மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஆக்கியது.

கே.எஸ்.ஸ்ரீநிவாசன் தயாரித்த இந்த படத்தின் காமெடி, டயலாக், பாடல்கள் என அனைத்தும் செம ஹிட் ஆகியன. இந்த படத்தில் நடிகர் ஜீவா மற்றும் டைரக்டர் ராஜேஷ் ஆகியோர் க்ளைமாக்சில் கெஸ்ட் ரோல் செய்திருந்தனர்.

Boss Engira Bhaskaran sequel to be made after 12 years

ஆர்யா, எம்.ராஜேஷ், கே.எஸ்.ஸ்ரீநிவாசன் காம்போ தற்போது மீண்டும் இணைய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் பாஸ் என்கிற பாஸ்ரன் படத்தில் தல தளபதி ரோலில் நடித்த சந்தானம், சந்திரிக்கா ரோலில் நடித்த நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்களா என தெரியவில்லை. சந்தானம் தற்போது ஹீரோவாகி பல படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார் ஆவர். ரஜினி, அஜித், விஜய், ஷாருக்கான் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதை விட பெரும்பாலும் நாயகியை மையமாகக் கொண்ட கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், இந்திய என 3 மொழிகளில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

ஆர்யா தற்போது சக்தி செளந்தரராஜன் இயக்கும் கேப்டன் படம், நலன் குமாரசாமி இயக்கும் பெயரிடப்படாத படம், தி வில்லேஜ் என்ற வெப்சீரிஸ் என பிஸியாக நடித்து வருகிறார். மற்றொரு புறம் டைரக்டர் எம்.ராஜேஷ், ஜெயம் ரவி லீட் ரோலில் நடிக்கும் படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை கவனித்து வருகிறார்.

இதனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா, எப்போது இந்த படம் துவங்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை. அந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தற்போது பிஸியாக இருந்து வருவதால் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படம் வருவது வெறும் வதந்தியாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X