»   »  நடிகையை போட்டோ எடுக்க முயன்ற 2 போட்டோகிராபர்களை அடித்து உதைத்த பவுன்சர்கள்

நடிகையை போட்டோ எடுக்க முயன்ற 2 போட்டோகிராபர்களை அடித்து உதைத்த பவுன்சர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக் கலைஞர்களை பவுன்சர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். உணவகத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்தபோது அங்கிருந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

Bouncers attack photographers when they click pictures of Shilpa Shetty

இதை பார்த்த பவுன்சர்கள் 2 பேர் அந்த புகைப்படக் கலைஞர்களை தாக்கினர். இதில் ஒரு புகைப்படக் கலைஞருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படக் கலைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பவுன்சர்கள் புகைப்படக் கலைஞர்களை தாக்குவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பவுன்சர்கள் புகைப்படக் கலைஞர்களை தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

English summary
Two bouncers attacked two photographers when they tried to take pictures of Bollywood actress Shilpa Shetty and her husband Raj Kundra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X