twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொருளாதார ரீதியாக இன்னும் கஷ்டப்படுகிறேன்: சர்வதேச விருது பெற்ற தமிழ் இயக்குநரின் பரிதாப நிலை!

    தான் இன்னும் பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன் என பௌவ் பௌவ் திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் கூறியுள்ளார்.

    |

    சென்னை: ஒரு நாய்க்கும், ஐந்து வயது சிறுவனுக்கும் இடையேயான உறவை பற்றி பேசுகிறது பௌவ் பௌவ் திரைப்படம்.

    லண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் "பௌவ் பௌவ்". லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

    Bow Bow beautifies the relationship between a 5-yr old boy and a dog

    மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன் இசையை வெளியிட இயக்குனர் சசி பெற்றுக் கொண்டார்.

    விழாவில் பேசிய இயக்குனர் பிரதீப், " இந்த இசை வெளியீட்டு விழா எனக்கு மிக நிறைவாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்து எங்களை வாழ்த்தியிருப்பது மகிழ்ச்சி.

    பலரை போலவே நானும் இன்னும் பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன். தாய், தந்தை எனக்கு கொடுத்த பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி என்ற மூன்று விஷயங்கள் தான் என்னை ஓடவைத்துக் கொண்டிருக்கிறது.

    இயக்குனர் சசி சார் என்னை நன்றாக புரிந்தவர், அதனால் அப்படியே என்னை தெலுங்கு இயக்குனர் கருணாகரன் சாரிடம் அனுப்பி வைத்தார். அங்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நடிகர் ரகுவரன் சாரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை சிறந்த படங்களை இயக்குவாய் என என் மீது நம்பிக்கை வைத்திருந்தார், அதை நான் நிறைவேற்றுவேன்.

    தயாரிப்பாளர் நடராஜன் சார் இந்த கதையை கேட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, எந்த கேள்வியும் கேட்காமல் இந்த படத்தை எடுத்தார். இது குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக இருக்கும்", என இயக்குனர் பிரதீப் கிளிக்கர். கூறினார்.

    இந்த விழாவில் தயாரிப்பாளர் கே நடராஜன், ஸ்பெஷல் எஃபெக்ஸ் சேது, படத்தொகுப்பாளர் கோபால், பாடலாசிரியர் ராகுல் காந்தி, ஜெஃபி ஜார்ஜ், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், மாஸ்டர் அஹான், சரிகம ஆடியோ ஆனந்த், இசையமைப்பாளர் டெனிஸ் வல்லபன், ஜேசிடி பிரபாகர், டேவிஸ், பாடகர் சுஜித் சுதர்ஷன், நடிகர் சத்யன், நடிகை ஷர்மிளா, ராம்பாபு, புலிக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    English summary
    The queue of Tamil films based on ‘animal’ genres might be running into big numbers, but they are mostly inclined to stereotypical shades of dogs performing stunts. Filled with an ambitious drive to make a film with difference, debut filmmaker Pradeep Kilkar has arrived with his maiden venture ‘Bow Bow’, which beautifies the relationship between a 5-yr old boy and a dog.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X