»   »  நான் த்ரிஷாவின் தீவிர ரசிகன் - ரவிச்சந்திரன் அஸ்வின்

நான் த்ரிஷாவின் தீவிர ரசிகன் - ரவிச்சந்திரன் அஸ்வின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய அணியின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் தான் த்ரிஷாவின் தீவிர ரசிகர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர் போன்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Bowler Ravichandran Ashwin Trisha's Huge Fan

பெரும்பாலான தமிழ்ப் படங்களை பார்த்து விடும் குணம் கொண்ட அஸ்வினுக்கு காமெடிப் படங்களின் மேல் தனிக்காதலே உண்டு.

இவர் சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் த்ரிஷாவின் தீவிர ரசிகர் என்று தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் 8வது படிக்கும் போது வெளியான 'லேசா லேசா' திரைப்படம் பார்த்து இவரது நண்பர்களுடன் சேர்ந்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவுக்கு தீவிர ரசிகராக இருந்திருக்கிறார்.

இது குறித்து அஸ்வின் "நானும் எனது 5 நண்பர்களும் சேர்ந்து த்ரிஷா ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தோம். ரசிகர் மன்றம் தொடங்கினால் அதனை பதிவு செய்ய வேண்டும் என்பது கூட எங்களுக்கு அப்போது தெரியாது.

ஆனால் அவரின் புகைப்படங்களை ஒன்று விடாமல் சேகரிக்கும் அளவுக்கு நாங்கள் அவரின் தீவிர ரசிகர்களாக இருந்தோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

English summary
Indian Bowler Ravichandran Ashwin said in recent Interview "i am a Huge fan for Actress Trisha".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil