பாலிவுட் ரசிகர்களை பிரமிக்க வைத்த பொன்னியின் செல்வன்… முதல் நாள் வசூல் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க

மும்பை: பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ் ரசிகர்கள் தவிர்த்து மற்ற மொழிகளிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், இந்தியில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.

பான் இந்தியா பொன்னியின் செல்வன்

பான் இந்தியா பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒருவழியாக திரையரங்குகளில் நேற்று வெளியாகியுள்ளது. படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் டிக்கெட் புக்கிங் நிலைமையோ இன்று போய் நாளை வா கதையாக காணப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக ரிலீஸான பொன்னியின் செல்வன், எதிர்பார்த்தபடி வசூலில் மாஸ் காட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தியா தவிர்த்து உலகின் பல நாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம் வேதாவுடன் மோதல்

விக்ரம் வேதாவுடன் மோதல்

தமிழில் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் ஒருநாள் முன்னதாகவே வெளியானது. செல்வராகவன் - தனுஷ் காம்போவில் ரிலீஸான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால், பொன்னியின் செல்வன் வசூலுக்கு பெரிதாக பங்கம் இல்லை என சொல்லலாம். ஆனால், இந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்துடன் ஒரேநாளில் களமிறங்கியது பொன்னியின் செல்வன். இந்தப் படம் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா வசூல்

விக்ரம் வேதா வசூல்

தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்திருந்த கேரக்டர்களில் இந்தியில் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான் நடித்துள்ளனர். 175 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை பாய்காட் செய்யும் படி நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். சைஃப் அலிகானுக்கு எதிராக பாய்காட் செய்யப்பட்ட போதும், வசூலில் கெத்து காட்டியுள்ளது விக்ரம் வேதா. முதல் நாளில் மட்டும் 15 ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமீர்கானின் லால் சிங் சந்தா, அக்‌ஷய் குமாரின் 'ரக்‌ஷாபந்தன்' படங்களை விட சிறப்பான வசூல் என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொன்னியின் செல்வன் வசூல்

பொன்னியின் செல்வன் வசூல்

அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்துக்கும் பாலிவுட் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. முதலில் டிக்கெட் புக்கிங் ஆமை வேகத்தில் இருந்த நிலையில், பாசிட்டிவான விமர்சனங்களால் இப்போது சூடு பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், முதல் நாளில் மட்டும் பொன்னியின் செல்வன் இந்தி வெர்ஷன் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூலித்துள்ள பொன்னியின் செல்வனுக்கு, இந்தியில் 4 கோடி ரூபாய் கலெக்‌ஷன் தரமானது என்றே சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X