»   »  முதல் நாளில் 6.5 கோடியை வசூல்... தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா 10 எண்றதுக்குள்ள?

முதல் நாளில் 6.5 கோடியை வசூல்... தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா 10 எண்றதுக்குள்ள?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட முதல்நாளில் 6 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது, விக்ரமின் 10 என்றதுக்குள்ள.

விக்ரம், சமந்தா, பசுபதி, மனோபாலா ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளியான படம் 10 என்றதுக்குள்ள. ஐ படத்திற்குப் பின்னர் நீண்ட இடைவெளி கழித்து விக்ரமின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பு, விஜய் மில்டனின் இயக்கம் என்று இத்தனை அம்சங்கள் இருந்தும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறி விட்டது என்று கூறுகின்றனர்.

Box Office: 10 Endrathukulla Opening Day Collection

ஆயுத பூஜை தினத்தில் வெளியான இப்படத்திற்கு முன்பதிவு நன்றாக இருந்ததால் நேற்று வெளியான இப்படம் இந்தியா முழுவதும் சுமார் 6.5 கோடியை வசூலித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் 5 கோடியை வசூலித்து இருக்கும் இப்படம் மற்ற மாநிலங்களில் சுமார் 1.5 கோடியை வசூலித்து இருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுவதும் நேற்று 6.5 கோடியை வசூலித்திருக்கிறது.

எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த 4 தினங்கள் விடுமுறை என்பதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் குறையாமலிருக்கும் என்று திரையரங்க வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

ரூ 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட 10 என்றதுக்குள்ள போட்ட பணத்தை வசூலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Box Office: 10 Endrathukulla Opening Day Collection. Trade Tracker Sreedhar pillai Tweeted "#10Endrathukkula takes a grand opening - 6.5 Cr gross on day 1 across India. Strong nearly Rs 5Cr from TN. #Vikram's best ever after #I".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil