»   »  விஜய்யின் 'தெறி' வசூலை முறியடிக்கத் தவறியது சூர்யாவின் '24'

விஜய்யின் 'தெறி' வசூலை முறியடிக்கத் தவறியது சூர்யாவின் '24'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தெறி' படத்தின் வெளிநாட்டு வசூல் சாதனையை முறியடிக்கத் தவறியிருக்கிறது சூர்யாவின் '24'.

Select City
Buy Sadrishavakyam 24:29 (U/A) Tickets

கடந்த வாரம் வெளியான '24' திரைப்படம் இந்தியா தவிர வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


சூர்யாவின் வில்லத்தனமும், திருவின் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு பக்கபலமாக மாறியுள்ளன.


24

24

கடந்த வாரம் வெளியான இப்படம் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இப்படம் 8 கோடிகள் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. எனினும் விஜய்யின் 'தெறி' வசூலை இப்படத்தால் முறியடிக்க முடியவில்லை.


தெறி

தெறி

கடந்த மாதம் வெளியான 'தெறி' திரைப்படம் வெளிநாடுகளில் 11.93 கோடிகளை முதல் வாரத்தில் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் 2016 ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமை 'தெறி' படத்துக்கு கிடைத்தது. 'தெறி' தவிர்த்து இந்த ஆண்டு வெளியான எந்தத் தமிழ்ப்படமும் வெளிநாட்டு வசூலில் சாதனை படைக்கவில்லை.
சூர்யா

சூர்யா

விஜய்யின் 'தெறி' சாதனையை சூர்யாவின் '24' திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முதல் 3 நாட்களில் இப்படம் மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது.


2 வது இடம்

2 வது இடம்

வெறும் 1.5 கோடிகளில் 'தெறி' படத்தின் சாதனையை முறியடிக்க '24' தவறி விட்டது. முதல் 3 நாட்களில் தெறி 11.93 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. அதே நேரம் 24 திரைப்படம் 10.43 கோடிகளை மட்டுமே வசூலித்திருக்கிறது.


English summary
Box Office: Surya's 24 Fails to Beat Vijay's Theri Overseas Record.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil