»   »  இன்றைய ரிலீஸ்... பாபநாசம், பாலக்காட்டு மாதவன், ஒரு தோழன் ஒரு தோழி, பேபி, பரஞ்சோதி!

இன்றைய ரிலீஸ்... பாபநாசம், பாலக்காட்டு மாதவன், ஒரு தோழன் ஒரு தோழி, பேபி, பரஞ்சோதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமையும் 5 புதிய படங்கள் ரிலீசாகியுள்ளன. அவை பாபநாசம், பாலக்காட்டு மாதவன், ஒரு தோழன் ஒரு தோழி, பேபி மற்றும் பரஞ்சோதி.

இந்த வாரமும் அதிகப் படங்கள் வெளியானதால் தியேட்டர் பற்றாக்குறை காரணமாக கடந்த வாரங்களில் வெளியான படங்களில் பல தூக்கப்பட்டுவிட்டன.

பாபநாசம்

பாபநாசம்

கமல், கவுதமி நடித்துள்ள இந்தப் படம்தான் இந்த வாரத்தின் பெரிய படம். பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகள் இந்தப் படத்துக்கு தரப்பட்டுள்ளன.

பாலக்காட்டு மாதவன்

பாலக்காட்டு மாதவன்

பாபநாசம் திடீரென வெளியாகிவிட்டது. இதை பாலக்காட்டு மாதவன் குழு எதிர்ப்பார்க்கவில்லை. அதே நேரம் ஏக பப்ளிசிட்டி செய்துவிட்டதால், படத்தைத் தள்ளிப் போடவும் முடியவில்லை. படத்தின் மீதும் விவேக் காமெடி மீதும் உள்ள நம்பிக்கையில் தைரியமாக வெளியிட்டுள்ளனர். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்கிறது தியேட்டர் ரிப்போர்ட். கிட்டத்தட்ட 150 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.

ஒரு தோழன் ஒரு தோழி

ஒரு தோழன் ஒரு தோழி

முற்றிலும் புதியவர்கள் களமிறங்கியுள்ள படம் ஒரு தோழன் ஒரு தோழி. அறிமுக இயக்குநர் மோகன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். சினிமாத்தனமில்லாத படம். கிட்டத்த பாபநாசம் கதைக் கருதான். போதிய அரங்குகள் கிடைக்காமல், இந்த வாரம் வெளியாகிறது.

பேபி

பேபி

இது ஒரு பேய்ப் படம். ஆனால் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் பேய்ப் படம். சுரேஷ் டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மனோஜ் கே பாரதி மற்றும் ஷிரா நடித்துள்ளனர். ஆனால் இவர்களைவிட நடிப்பில் கலக்கியிருப்பவர்கள் குழந்தைகள் சாதன்யா மற்றும் ஸ்ரீவர்ஷினி.

பரஞ்சோதி

பரஞ்சோதி

இந்தப் படத்தை கோபு பாலாஜி இயக்கியுள்ளார். சாரதி, அன்சிபா (நாகராஜசோழன், மலையாள த்ரிஷ்யத்தில் நடித்தவர்) நடித்துள்ளனர்.

ஐபிஎல் சினிமாஸ் தயாரித்துள்ள பரஞ்சோதியில் விஜயகுமார், கஞ்சா கருப்பு, மயில்சாமி, சிங்கமுத்து, கீதா, போஸ் வெங்கட் என தெரிந்த முகங்களும் உண்டு. இசை முரளி. கவுரவக் கொலைகள் பற்றிய படம் இது.

English summary
Today there are 5 straight Tamil movies Papanasam, Palakkattu Madhavan, Oru Thozhan Oru Thozhi, Baby, Paranjothi are released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil