»   »  சிம்பு சிம்ப்ளி சூப்பர்ப்.. வசூலில் வாசுவையும், சரவணனையும் ஓரங்கட்டிய "வாலு"!

சிம்பு சிம்ப்ளி சூப்பர்ப்.. வசூலில் வாசுவையும், சரவணனையும் ஓரங்கட்டிய "வாலு"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 வருடம் கழித்து வந்தாலும் கூட சிம்புவிற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து இருக்கின்றனர் ரசிகர்கள், கடந்த வெள்ளியன்று 3 வருட போராட்டத்திற்குப் பின்னர் சிம்புவின் நடிப்பில் வாலு வெளிவந்தது.

படம் வெளியான அன்று கூட திரையரங்குகளில் சிக்கலைச் சந்தித்த வாலு சென்னை பாக்ஸ் ஆபிசில், எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து பட்டையைக் கிளப்பி வருகிறது.


ஆர்யாவின் நடிப்பில் காமெடிப் படமாக வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் அக்சய் குமாரின் நடிப்பில் வெளியான பிரதர்ஸ், ஆகிய 2 திரைப்படங்களையும் சென்னை பாக்ஸ் ஆபிசில் ஓரங்கட்டி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது வாலு.


படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தைக் கீழே பார்க்கலாம்.


வாலு

வாலு

சிம்பு ஹன்சிகா, சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் நடிப்பில் உருவான வாலு திரைப்படம் 3 வருடப் போராட்டத்திற்குப் பின்னர் கடந்த வெள்ளியன்று வெளியானது. சுதந்திர தினத்தில் வெளியான இத்திரைப்படத்தை விஜயசந்தர் இயக்கியிருந்தார்.


நிரம்பி வழியும் திரையரங்குகள்

நிரம்பி வழியும் திரையரங்குகள்

3 வருடம் கழித்து படம் வெளிவந்தாலும் ரசிகர்கள் படத்திற்கு நல்ல ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர், வெளியான அன்று 85% திரையரங்குகளை நிரப்பிய வாலு தொடர்ந்து அடுத்தடுத்த விடுமுறை நாட்களில் நன்கு கல்லா கட்டி வருகிறது.


வாலு விளம்பரங்கள்

வாலு விளம்பரங்கள்

படம் வெளிவருவதே பெரிய விஷயமாகி விளம்பரங்கள் அதிகம் வராத நிலையில், படம் தொடங்கிய காலத்தில் சிம்பு - ஹன்சிகா காதல் வயப்பட்டது மற்றும் 3 வருட போராட்டம் போன்ற விஷயங்கள் படத்திற்கு இலவச விளம்பரங்களாக மாறியதால் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.


பட்ட பாட்டிற்கு பலன் கிடைத்தது

3 வருட காலம் சிம்பு பட்ட கஷ்டங்களிற்கு வாலு தக்க பலனை சிம்புவின் கைமேல் அளித்துள்ளது வெளியான 3 தினங்களில் இதுவரை 13 கோடிக்கும் அதிகமாக தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னையில் மட்டும்

சென்னையில் மட்டும்

சென்னை பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து அதகளம் பண்ணி வரும் வாலு ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் ஹிந்தித் திரைப்படமான பிரதர்ஸ், போன்ற 2 படங்களையும் ஓரங்கட்டி 1 கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமாக சென்னையில் வசூலித்துள்ளது.


விளம்பரம் போட்டுக் கொண்டாடும் வாலு

தற்போது பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பேப்பரில் பெரிய அளவில் விளம்பரமாகப் போட்டு கொண்டாடி வருகின்றனர் வாலு படக்குழுவினர். நீங்க கொண்டாடுங்க பாஸ்...


வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

ஆர்யாவின் 25 படம் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகனுக்கு கடைசியில் கிடைத்ததென்னவோ ஏமாற்றம் தான், 2 பேரும் ஒண்ணாப் படிச்சவங்களா இல்லை ஒண்ணாக் குடிச்சவங்களா என்று சாமானியனும் சிந்திக்கின்ற அளவிற்கு படம் முழுவதையும் குடிபோதையில் மூழ்க அடித்து விட்டார் ராஜேஷ். படம் முழுவதும் குடி, சுமாரான காமெடி என்று படம் இருப்பதால் வசூலில் வாலுவை விட பின்தங்கியே நிற்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க...


பாக்ஸ் ஆபிசில் பின்தங்கிய ஆர்யா

பாக்ஸ் ஆபிசில் பின்தங்கிய ஆர்யா

3 வருடம் கழித்து வெளிவந்த வாலுவை விடவும் ஆர்யாவின் படம் வசூலில் சற்று பின்தங்கியே நிற்கிறது, தமிழ்நாடு முழுவதும் 7 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கும் இப்படம் சென்னை பாக்ஸ் ஆபிசில் 96 லட்சங்களை வசூல் செய்துள்ளது. தற்போது வெளிவந்த தகவல்களின் படி படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்று சொல்கிறார்கள், வரிவிலகில் ஓரளவு போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று எண்ணிய ஆர்யாவிற்கு இது மாபெரும் அதிர்ச்சியாக மாறக் கூடும்.


சென்னையில் டல்லடிக்கும் ஹிந்திப் படங்கள்

சென்னையில் டல்லடிக்கும் ஹிந்திப் படங்கள்

ஆர்யா மற்றும் சிம்புவின் படங்களுடன் மோதிய பிரதர்ஸ் சென்னை பாக்ஸ் ஆபிசில் எடுபடவில்லை, அக்சய் குமாரின் பிரதர்ஸ் சென்னையில் இதுவரை வெறும் 21 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது.


3 வருடம் கழித்து வந்தாலும் வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் எஸ்.டி.ஆர், இது அடுத்தடுத்து தொடரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் இழந்ததை மீட்கும் வாய்ப்புகள் சிம்புவிற்கு அதிகம் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்வாரா? பார்க்கலாம்.English summary
Box Office Collection: Vaalu Vs Vasuvum Saravananum Onna Padichavanga, Simbu Beats Arya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil