»   »  'மாயா'வை பின்னுக்குத்தள்ளி வசூலில் முன்னிலை பெற்ற 'நயன்தாரா'

'மாயா'வை பின்னுக்குத்தள்ளி வசூலில் முன்னிலை பெற்ற 'நயன்தாரா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் நயன்தாராவின் மாயா திரைப்படத்தை பின்னுக்குத்தள்ளி வசூலில் சாதனை படைத்திருக்கிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.

விநாயகர் சதுர்த்தியன்று வெளியான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் முதல் நாளில் சுமார் 3.25 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.


அதே நாளில் வெளியான நயன்தாராவின் மாயா திரைப்படம் வெறும் 2 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நயனை பின்னுக்குத்தள்ளி வசூலில் முன்னிலை வகிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.


த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா

டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று வெளியானது. ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், ரோபோ சங்கர், விடிவி கணேஷ் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.


முதல் நாளில்

முதல் நாளில்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 திரையரங்குகளில் வெளியான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் முதல் நாளில் சுமார் 3.25 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் அட்வான்ஸ் புக்கிங்யும் படத்திற்கு அதிகரித்திருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மாயா

மாயா

நயன்தாரா நடிப்பில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியான மாயா திரைப்படம் முதல் நாளில் சுமார் 2 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. சுமார் 225 திரையரங்குகளில் வெளியான மாயா திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 2 கோடிகளை வசூலித்துள்ளது.


நயன்தாரா vs ஜி.வி.பிரகாஷ்

நயன்தாரா vs ஜி.வி.பிரகாஷ்

இந்த வசூலின் மூலம் பாக்ஸ் ஆபிசில் நயன்தாராவை பின்னுக்குத்தள்ளி வசூலில் சாதனை செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போதைய நிலவரப்படி ஜி.வி.பிரகாஷ் முன்னிலை வகித்தாலும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் என்பதால் இளைஞர்கள் தவிர மற்றவர்கள் மத்தியில் படம் வரவேற்பை பெறத் தவறியிருக்கிறதுஎனவே இனிவரும் நாட்களில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவை மாயா வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


49 ஓ

49 ஓ

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கவுண்டமணியின் 49 ஓ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே தற்போதைய நிலவரப்படி பாக்ஸ் ஆபிசில் நயன்தாரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவருக்குமிடையே போட்டிகள் பலமாக உள்ளன.


பாக்ஸ் ஆபிசில் வெற்றிக்கொடி நாட்டப்போவது நயன்தாராவா அல்லது ஜி.வி.பிரகாஷா? பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
On the opening day, "Trisha Illana Nayanthara" collected approximately Rs 3.25 crore at the box office in the state, where the movie was released in above 200 screens.Nayantara's "Maya" had done lesser business than "Trisha Illana Nayanthara". It reportedly earned around Rs 2 crore on the release day at the box office in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil