»   »  2015 ஆம் ஆண்டில் .. டப்பா "டான்ஸ்" ஆடிய படங்கள் இவைதான்!

2015 ஆம் ஆண்டில் .. டப்பா "டான்ஸ்" ஆடிய படங்கள் இவைதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லா வருடங்கள் போலவும் 2015 ஆம் ஆண்டும் பாலிவுட் சினிமா உலகிற்கு மிக முக்கிய ஆண்டாக அமைந்திருந்தது.

பல பெரிய பட்ஜெட் படங்களும், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளும் இந்த வருடம் தனது பதிவுகளை அழுத்தமாக விட்டுச் சென்றுள்ளன.

இந்நிலையில் பாலிவுட் பாக்ஸ் ஆபிசை புரட்டிப் போட்டு, போட்ட காசை எடுக்கவே சில படங்கள் பெரிதும் சிரமப்பட்டன. அப்படிப்பட்ட சில படங்களின் லிஸ்ட் உங்களுக்காக.

தேவார்

தேவார்

இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமான தேவார், அர்ஜூன் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளிவந்திருந்தது. இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய் வில்லனாக நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு படமான "ஒக்கடு"வின் ரீமேக் என்று சொல்லப்பட்ட இந்தப் படத்திற்கு விளம்பரங்கள் அதிரடியாக இருந்தாலும் பட்ஜெட் 40 கோடி என்ற நிலையில் கிட்டதட்ட 56 கோடிகளை மட்டுமே பாக்ஸ் ஆபிசில் வசூலித்தது.

அலோன்:

அலோன்:

2015 ஆம் ஆண்டில் இரண்டாவதாக வெளிவந்த படம் "அலோன்". பிபாஷா பாசு இரண்டு வேடங்களில் நடித்திருந்த இப்படம் தாய்லாந்து படத்திலிருந்து அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் அவருடன் கரண் சிங் குரோவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பல்வேறு அமானுஷ்ய வேடங்களில் பிபாஷா நடித்திருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் இந்தப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமையவில்லை. படத்தின் செலவான 18 கோடிக்கு, வெறும் 25 கோடியையே ஈட்டித் தந்தது.

ராய்:

ராய்:

சிறந்த விளம்பர உத்திகளையும், சிறந்த பாடல்களையும் கொண்டிருந்த இப்படம் வசூலில் மட்டும் குறை வைத்து விட்டது. அர்ஜூன் ராம்பால் மற்றும் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம், நன்றாக போகும் என்ற எதிர்ப்பார்ப்பினை சுக்கு நூறாக தகர்த்து எறிந்துவிட்டது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 58 கோடியை வசூலிக்கவே ததிங்கிணத்தோம் போட்டது இப்படம்.

டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்‌ஷே:

டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்‌ஷே:

நல்ல கதைவடிவம், சிறந்த நடிப்பு, வலுவான படப்பிடிப்பு இருந்த போதும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் மூழ்கிப் போனது கொடுமையிலும், கொடுமை. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரபல்யம் கூட இதற்கு கைகொடுக்கவில்லை. 35 கோடி பட்ஜெட்டினைத் தாண்டி, வெறும் 36 கோடியை மட்டுமே வசூலித்தது இந்தப்படம்.

பாம்பே வெல்வெட்:

பாம்பே வெல்வெட்:

பாக்ஸ் ஆபிஸ் பிளாப்களில் வியத்தகு இடங்களைப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மாவின் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக தவம் கிடந்த நிலையில், பெரிய அளவில் பிளாப் ஆன படங்களில் இதுவும் இடம் பிடித்தது. சிறந்த விமர்சனங்கள் எழுந்த போதும், மிகவும் மோசமான வசூலை மட்டுமே ஈட்டியது இப்படம்.

த்ரிஷ்யம்:

த்ரிஷ்யம்:

படம் பார்த்த அனைவர் மனதிலும் நிலைத்து நின்ற கதை வடிவம் என்றாலும், மலையாள ரீமேக்கான இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுணங்கிப் போனது. அஜய் தேவ்கன், தபு , ஸ்ரேயா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்த இப்படம், 62 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 74 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது.

சந்தார்:

சந்தார்:

இந்தப் படத்தினை சொல்லாமல் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட் முழுமையடையாது. ஷாகித் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இருவருமே தங்கள் கதாப்பாத்திரத்தினை செவ்வனே செய்திருந்தனர். சிறந்த இயக்குனரான விகாஸ் பால் இயக்கத்தில் வெளிவந்திருந்த போதும், பட்ஜெட் தொகையைக் கூட பாக்ஸ் ஆபிசில் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The worst box office flops in 2015 in Bollywood cinema listed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil