»   »  இருமுகன்.. சாதாரண நாளில் வெளியாகி 5.5 கோடியை அள்ளியது!

இருமுகன்.. சாதாரண நாளில் வெளியாகி 5.5 கோடியை அள்ளியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த விசேஷமும் இல்லாத வார நாளான வியாழக்கிழமை வெளியாகி ரூ 5.5 கோடியை வசூலித்துள்ளது விக்ரம் நடித்த இருமுகன்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் நேற்று உலகெங்கும் 1000 திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகளில் வெளியானது.


Box office: Iru Mugan collects Rs 5.5 cr on day 1

நேற்று திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் 90 சதவீதத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் திரண்டனர். ஒரு சாதாரண நாளில் இவ்வளவு கூட்டம் ஒரு படத்துக்குக் கூடுவது பெரிய விஷயமாகும்.


முதல் நாளில் மட்டும் ரூ 5.5 கோடிகளை ஆரம்ப வசூலாகப் பெற்றுள்ளது இருமுகன். இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கிட்டத்தட்ட இதே வசூல் தொடரும் நிலை. அடுத்த திங்கள் மட்டும் வேலை நாள். அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால் தொடர்ந்து 5 நாட்கள் படத்துக்கு நல்ல துவக்கம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


நேற்று தொடங்கி, வரும் செவ்வாய் வரையிலான ஆறு தினங்களில் இந்தப் படத்துக்கு போட்ட முதல் வசூலாகிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தமிழகம் தவிர, கேரளா மற்றும் ஆந்திராவிலும் கணிசமான அரங்குகளில் இரு முகன் வெளியாகியுள்ளது.

English summary
Vikram's Irumugan has collected Rs 5.5 cr on the first day of its release in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil