TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
வெளிநாடுகளில் 17 நாட்களில் 'ஜில்லா', 'வீரம்' வசூல் எவ்வளவு?
சென்னை: விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.
இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீஸான விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் வெளிநாடுகளில் ஜில்லா மற்றும் வீரம் ரிலீஸான 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரங்களை பார்ப்போம்.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் ஜில்லா படம் ரிலீஸான 17 நாட்களில் ரூ.2.54 கோடி வசூலித்துள்ளது. அஜீத்தின் வீரம் அதே 17 நாட்களில் ரூ.1.20 கோடி வசூல் செய்துள்ளதாக பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் ஜில்லா தற்போது ஒரு தியேட்டரில் மட்டும் ஓடுகிறது. இந்நிலையில் அப்படம் கடந்த 17 நாட்களில் ரூ. 24.06 லட்சம் வசூல் செய்துள்ளது. தற்போது ஒரு தியேட்டரிலும் வீரம் படம் ஓடாத நிலையில் ரிலீஸான 10 நாட்களில் ரூ.44.94 லட்சம் வசூலித்துள்ளது.
மலேசியா
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ஜில்லாவும், வீரமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மலேசியாவில் ஜில்லா 17 நாட்களில் ரூ.1.70 கோடியும், வீரம் ரூ.1.63 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்தியா
ஜில்லாவும், வீரமும் ஒரே நாளில் ரிலீஸான போதிலும் இரண்டு படங்களின் தாயரிப்பாளர்களும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் வசூல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.