»   »  நல்ல வரவேற்பில் மிருதன்- சேதுபதி.. பின்தங்கியது மாகாபாவின் நவரச திலகம்!

நல்ல வரவேற்பில் மிருதன்- சேதுபதி.. பின்தங்கியது மாகாபாவின் நவரச திலகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மிருதன், சேதுபதி 2 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவியின் மிருதன், விஜய் சேதுபதியின் சேதுபதி மற்றும் மாகாபா ஆனந்தின் நவரச திலகம் ஆகிய 3 படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.


இதில் நவரச திலகம் பெரிதாக எடுபடாத நிலையில் மிருதன் மற்றும் சேதுபதி படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.


மிருதன்

மிருதன்

ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான மிருதன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம் படங்களைத் தொடர்ந்து 4 வது வெற்றியை ஜெயம் ரவி அறுவடை செய்திருக்கிறார்.


முதல் ஸோம்பி

முதல் ஸோம்பி

தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கும் மிருதன் தற்போதைய நிலவரப்படி ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் கூட படத்தை ஒற்றை ஆளாகத் தோளில் சுமந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஜெயம் ரவி. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனினும் 2 நாட்களில் 10 கோடிகள் வரை மிருதன் கடந்திருப்பதாக கூறுகின்றனர்.


சேதுபதி

சேதுபதி

விஜய் சேதுபதி ஆக்ஷன் அவதாரம் காட்டிய சேதுபதி படமும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மிருதனிற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் சேதுபதி 2 நாட்களில் 5 கோடிகள் வரை கடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான் படத்தைப் போல ஆரவார வெற்றி இல்லையென்றாலும் ஹிட் வரிசையில் சேதுபதி இணைந்திருக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான படமென்பதால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.


நவரச திலகம்

நவரச திலகம்

மகாபாவின் ஹீரோ ஆசையை நவரச திலகம் நிறைவேற்றி இருக்கிறதே தவிர பாக்ஸ் ஆபீஸில் படம் சுத்தமாக எடுபடவில்லையாம். மொத்தத்தில் மிருதன், சேதுபதி படங்களுக்கிடையில் நவரச திலகம் எடுபடவில்லை என்பதே உண்மை.


English summary
Box Office: Jayam Ravi's Miruthan and Vijay Sethupathi's Sethupathi both Movies Very well opening at the Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil