»   »  பாக்ஸ் ஆபிஸ்: 'கத்தி'யின் சாதனையை முறியடிக்கத் தவறியது 'புலி'

பாக்ஸ் ஆபிஸ்: 'கத்தி'யின் சாதனையை முறியடிக்கத் தவறியது 'புலி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் நடிப்பில் நேற்று வெளியான புலி திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படமான கத்தி படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கத் தவறியிருக்கிறது.

விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோரின் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக வெளியாகியிருக்கும் படம் புலி.


முதல்நாள் முடிவில் புலி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 கோடிகளை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் விஜயின் முந்தையத் திரைப்படமான கத்தி திரைப்படம் வெளியான நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 12.5 கோடிகளை வசூலித்து சாதனை புரிந்தது.


கத்தி படத்தின் இந்த சாதனையை நேற்று வெளியான புலி படம் முறியடிக்கத் தவறி இருக்கிறது. புலி நேற்று தாமதமாக வெளியானாலும் 90% திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு தவிர்த்து கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளியான புலி திரைப்படம் அம்மாநில ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


முதல் நாள் முடிவில் இந்தியா முழுவதும் சுமார் 14 கோடிகளுக்கும் அதிகமாக புலி திரைப்படம் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நேற்று புலி திரைப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Box Office: Puli fails to beat Kaththi record, Puli More than 10 crore in Tamil Nadu box Office. It means that the Tamil movie has failed to beat Vijay's previous record of Kaththi, which has grossed Rs 12.5 crore on the release day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil