»   »  விஜயகாந்த் தொண்டர்களால் தூக்கி நிறுத்தப்பட்ட மதுர வீரன்!

விஜயகாந்த் தொண்டர்களால் தூக்கி நிறுத்தப்பட்ட மதுர வீரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் 1977க்கு பின் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் ஆதிக்கம் செலுத்தவில்லை.

ரஜினி, கமல் என இருவரது ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்தபோது தனக்கென தனிப்பாதையில் ராஜநடை போட்டவர் விஜயகாந்த். ஆக்க்ஷன், சென்டிமெண்ட் படங்களில் நடித்து வசூலில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த்.

Box Office report of Madura Veeran

இவரது மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடித்த முதல் படம் 2015ல் ரீலீஸ் ஆனது. மகனை புரமோட் செய்வதற்காக விஜயகாந்த்தும் நடித்திருந்தா.ர் படம் கல்லா கட்டாமல் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடியது.

பிப்ரவரி 2 அன்று சண்முகபாண்டியன் நடித்துள்ள 'மதுர வீரன்' ரீலீஸ் ஆனது. வழக்கம் போல விஜயகாந்த் ரசிகர்கள், கட்சிக்கரார்கள் வருகையால் முதல் காட்சிக்கு ஒபனிங் கிடைத்தது.

அடுத்தடுத்த நாட்களில் வசூல் பின்னடைவைச் சந்தித்துள்ளது இந்தப் படம். தமிழ்நாடு முழுவதும் முதல் நாள் சுமார் 50 லட்சத்திற்கு குறைவாகவே மொத்த வசூல் செய்தது மதுரவீரன்.

பல ஊர்களில் திரையிட வேறு படம் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி மதுர வீரன் ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று நாட்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது மதுரவீரன்.

English summary
Here is the Box Office report of Madura Veeran movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil