»   »  சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... முதல் வார முடிவில் நிலவரம் இதுதான்!

சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... முதல் வார முடிவில் நிலவரம் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 2, சொல்லிவிடவா மற்றும் சவரக்கத்தி.. படம் தேறுமா ?

இந்த வருடம் ஜனவரி முதல் கடந்த வாரம் வரை வெளியான எந்த தமிழ் படமும் பாக்ஸ் ஆபீஸ் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.

கடந்த பிப்ரவரி 9 அன்று தமிழ் சினிமாவில் சாதனை நிகழ்த்திய சுந்தர் சி, அர்ச்சுன் இவர்கள் இயக்கிய கலகலப்பு - 2, சொல்லிவிடவா இயக்குநர்கள் மிஷ்கின், ராம் ஆகியோர் நடித்த சவரக்கத்தி ஆகிய படங்கள் ரீலீஸ் ஆகின.

ஏதாவது ஒரு படமாவது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஒரு ஹிட்

ஒரு ஹிட்

ஏதாவது ஒரு படமாவது பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒரே ஒரு படம்தான் தயாரிப்பாளருக்கு லாபகரமாக அமைந்துள்ளது. அதைப் பார்க்கலாம்...

சவரக்கத்தி

சவரக்கத்தி

இயக்குவதில் தங்களுக்கென்று தனிப் பாணியை அமைத்துக் கொண்டவர்கள் மிஷ்கின், ராம் இருவரும் இணைந்து நடித்து வெள்ளிக்கிழமை வெளியான முதல் படம் சவரக்கத்தி.

படைப்பு ரீதியாக விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இருப்பினும் சாதாரண மக்களை மட்டுமல்ல நடுத்த நகர்புற மக்களையும் சவரக்கத்தி இன்னும் போய்ச் சேரவில்லை.

முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில்மொத்தம் ரூ 1.5 கோடி வரை வசூல் ஆகியுள்ளது.

கலகலப்பு - 2

கலகலப்பு - 2

காமெடி படமெடுப்பதில் கரை கண்ட இயக்குநர் சுந்தர் சி - குஷ்பூ தயாரிப்பில், சுந்தர் சி இயக்கியுள்ள கலகலப்பு - 2 படத்தில், சினிமாவில் வியாபாரத் தன்மை இல்லாத ஜீவா, ஜெய், சிவா இவர்கள்தான் படத்தின் ஹீரோக்கள்.

சுந்தர்.சி படம் என்பதால் வியாபார முக்கியத்துவம் மிக்க படமாக ஆனது. தியேட்டர்களில் ஆரம்பத்தில் சிரமப்பட்ட இப்படம் சனி, ஞாயிற்று கிழமைகளில் வசூல் அதிகரித்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் தமிழ்நாடு மொத்த வசூல் ரூ 6 கோடிக்கும் மேல். லாபம் உறுதியாகிவிட்டது.

சொல்லிவிடவா

சொல்லிவிடவா

நடிகர் அர்ச்சுன் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக்கி தயாரித்த படம் சொல்லிவிடவா. கதை திரைக்கதை வசனம் எழுதி அவரே இயக்கி உள்ளார். பிரகாஷ்ராஜ், சுஹாசினி, யோகி பாபு, மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், கெளரவ வேடத்தில் அர்ச்சுன் என மக்கள் அறிந்த நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படத்திற்கு ஓபனிங் இல்லை. முதல் நாள் பல ஊர்களில் பார்வையாளர்கள் வருகையின் மையால் காட்சிகள் ரத்தாகின. முதல் மூன்று நாட்களில் தமிழ் நாட்டில் சொல்லிவிட வா மொத்த வசூல் சொல்லக் கூடிய கௌரவமான தொகை இல்லை.

- இராமானுஜம்

English summary
Here is the opening weekend box office report of Savarakkathi, Kalakalappu 2 and Sollividava movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil