»   »  அமெரிக்காவில் தெறி சாதனையை முறியடித்தது 24

அமெரிக்காவில் தெறி சாதனையை முறியடித்தது 24

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யு எஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விஜய்யின் 'தெறி' வரலாற்றை முறியடித்திருக்கிறது சூர்யாவின் '24'.

சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியான '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


படத்தின் நீளம் அதிகம் என்று ரசிகர்கள் குறைப்பட, தற்போது படத்தின் 10 நிமிடக் காட்சிகளைக் குறைக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.


24

24

சூர்யா-சமந்தா நடிப்பில் டைம் டிராவலை மையமாகக்கொண்டு வெளியான '24' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யாவின் வில்லத்தனம், சரண்யா பொன்வண்ணனின் பாசம், திருவின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்துள்ளன.இந்நிலையில் யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் விஜய்யின் 'தெறி' வரலாற்றை முறியடித்திருக்கிறது சூர்யாவின் '24'.


270 திரையரங்குகளில்

270 திரையரங்குகளில்

அமேரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 270க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது. முதல் 2 நாட்களில் இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக $462,852 டாலர்களை வசூல் செய்துள்ளது. சூர்யாவின் படமொன்று வெளிநாடுகளில் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல்முறை.


தெறி

தெறி

இதற்கு முன் விஜய்-சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' யு.எஸ் பாக்ஸ் ஆபீஸில் $440,000 டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் யுஎஸ்ஸில் இந்தாண்டு அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படம் என்னும் பெருமையை 'தெறி' தக்க வைத்திருந்தது. இந்நிலையில் சூர்யாவின் '24', 'தெறி' படத்தின் வசூல் சாதனையை தற்போது முறியடித்திருக்கிறது.


சமந்தா

சமந்தா

'கத்தி', 'தெறி' என விஜய்யுடன் இணைந்து 2 ஹிட்களைக் கொடுத்த சமந்தா, சூர்யாவுடன் இணைந்து முதல் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்.'தெறி', '24' உள்ளிட்ட 2 படங்களிலும் சமந்தா நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த 2 வெற்றிகளால் தற்போது கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக சமந்தா உயர்ந்திருக்கிறார்.


English summary
Surya's 24 Beats Vijay's Theri in US Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil