»   »  உண்மையிலேயே ரூ 100 கோடி வசூலை எட்டியதா தெறி?

உண்மையிலேயே ரூ 100 கோடி வசூலை எட்டியதா தெறி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றுதான் தெறி படம் வெளியான 6 நாட்களில் 45 கோடிகளை வசூலித்திருப்பதாக கலைப்புலி தாணுவே அதிகாரப்பூர்வமாகக் கூறியிருந்த நிலையில், இன்று அந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்துவிட்டதாக இயக்குநர் அட்லி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தெறி. ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளியான இப்படத்தை அட்லி இயக்கியிருந்தார்.


தமிழ்ப் புத்தாண்டு அன்று ஏகப்பட்ட பிரச்சினைகளுடன் வெளியானது தெறி.


செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர் தாணுவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியதால் இந்தப் படம் ரூ 8 கோடி பிஸினஸ் ஆகும் செங்கல்பட்டு பகுதியில் 60 அரங்குகளில் வெளியாகவில்லை.


படம் நன்றாக ஓடினாலும் முக்கிய அரங்குகளில் வெளியிடாததால் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாணு பிரஸ் மீட் வைத்து அறிவித்தார்.


பிரச்சினை தீரவில்லை

பிரச்சினை தீரவில்லை

இன்று வரை செங்கல்பட்டு ஏரியாவில் 11 மால்களைத் தவிர, வேறு எங்கும் படம் வெளியாகாததால் அந்த அரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு தருவதில்லை என அறிவித்துள்ளது.
வரவேற்பு

வரவேற்பு

அதே நேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் தெறி நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளிலும் இப்படம் திருப்தியான வசூலை ஈட்டி வருகிறது.


6 நாட்களில் ரூ 45 கோடி

6 நாட்களில் ரூ 45 கோடி

ஆறுநாட்கள் முடிவில் தெறி அனைத்து ஏரியாவிலும் ரூ 45.8 கோடியை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸில் அறிவித்திருந்தனர்.


சென்னை நகரில் முதல் நாளில் ஒரு கோடியும், ஆறு நாட்களில் 4 கோடியும் இந்தப் படம் வசூலித்தது. இதுவே பெரிய விஷயம்தான்.ஜிவி பிரகாஷ் - அட்லி

ஜிவி பிரகாஷ் - அட்லி

ஆனால் எப்போதும் ட்விட்டரே கதி என்று கிடக்கும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்
7 நாட்கள் முடிவில் இப்படம் 100 கோடிகளை வசூல் செய்துள்ளதாக ட்விட் போட்டுள்ளார். இயக்குநர் அட்லியும் இதே போன்ற ட்விட்டை வெளியிட்டுள்ளார்.
அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தத் தகவலை மற்ற ஊடகங்களும் எடுத்துப் பகிர ஆரம்பிக்க, தெறி படம் ரூ 100 கோடியைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.


'தெறி படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய தாணு, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு, சிக்கல்களிலிருந்து சுமுகமாக வெளியில் வர முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற செய்திகள் அவரை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இயக்குநர் அட்லிக்கும், விளம்பரப் பிரியர் ஜிவிக்கும் இது தெரிய வேண்டாமா?' என்று தாணுவுக்கு நெருக்கமானவர்கள் பல்லை நற நறக்கிறார்கள்!English summary
Is really Theri collected Rs 100 cr? Here is the true story behind these reports!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil