»   »  தெலுங்கு தேசத்தில் "புலி" செம பாய்ச்சல்.. 3 நாட்களில் 8 கோடிகளை வேட்டையாடியது!

தெலுங்கு தேசத்தில் "புலி" செம பாய்ச்சல்.. 3 நாட்களில் 8 கோடிகளை வேட்டையாடியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் பெரும்பாடுபட்டு வெளியான புலி 3 நாட்களில் சுமார் 8 கோடிகளை வேட்டையாடி அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கும்படி செய்திருக்கிறது.

என்னதான் படத்திற்கு பிரச்சினை எழுந்தாலும் படம் வெளியான இடங்களில் எல்லாம் நல்ல வசூலைத் தொடர்ந்து குவித்து வருவதால் படக்குழுவினர் சற்று நிம்மதி அடைந்திருக்கின்றனர்.


படம் வெளியாகும் நேரத்தில் எழுந்த பிரச்சினைகளே படத்திற்கு பெரியளவில் விளம்பரமாக மாறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


புலி

புலி

விஜய்யின் நடிப்பில் கடந்த 1 ம் தேதி வெளியான புலி திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தரப்பிலிருந்து கூறுகின்றனர். படம் வெளியான அன்றும் அதற்கு முதல் நாளும் எழுந்த பிரச்சினைகள் படத்திற்கு மாபெரும் விளம்பரத்தை இலவசமாக தேடித் தந்திருக்கின்றன.


சென்னையில்

சென்னையில்

கடந்த வாரம் வெளியான புலி சென்னையில் மட்டும் சுமார் 2.84 கோடியை வசூலித்து இருக்கிறது என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியானது மற்றும் போட்டிப் படங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் அனைத்துத் திரையரங்களிலும் புலி படத்திற்கு 90% இருக்கைகள் நிரம்பி வழிய, புலி சென்னையில் நன்கு கல்லா கட்டி இருக்கிறது. மேலும் பாகுபலி படத்தின் முதல் வார வசூலையும் சென்னையில் முறியடித்து இருக்கிறது புலி.


அக்கட சீமையில்

அக்கட சீமையில்

ஒருநாள் தாமதமாக ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் வெளியான புலி இதுவரை இந்த 3 நாட்களில் சுமார் 8 கோடிகளை வசூலித்து இருக்கிறது. விடுமுறை தினமான நேற்று மட்டும் சுமார் 4 கோடிகளை அள்ளியிருக்கிறது புலி. முதல் நாளில் 1 கோடியை வசூலித்த புலி 2 வது நாளில் 3 கோடிகளை வசூலித்து இருக்கிறது.


400 திரையரங்குகளில்

400 திரையரங்குகளில்

2 மாநிலங்களிலும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியான புலி திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது. 8 கோடி ரூபாய்க்கு புலி படத்தை வாங்கியவர்கள் இந்த 3 தினங்களில் சுமார் 70% லாபத்தைக் கண்டிருக்கின்றனர்.


டிக்கெட் கிடைக்காத நிலை

டிக்கெட் கிடைக்காத நிலை

இதில் ஆச்சரியம் என்னவென்றால் புலி படத்திற்கு நேற்று டிக்கெட் கிடைப்பது பெரும்பாடாக இருந்திருக்கிறது. முதல்நாளில் புலி வெளியாகாத நிலையில் இந்த செய்தி சமூக வலைதளங்கள் மூலம் காட்டுத்தீ வேகத்தில் பரவ, படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கூட்டம் கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்து இருக்கின்றனர் ஆந்திர வாலாக்கள்.


ஒரே நாளில் 250

நேற்று ஒரே நாளில் 2 மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 250 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கின்றன. மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. ருத்ரமாதேவி வெளியாக இன்னும் 3 தினங்கள் உள்ள நிலையில் ஆந்திர பாக்ஸ் ஆபிசை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது புலி.


Read more about: puli, vijay, விஜய், புலி
English summary
Vijay's Puli Released more than 400 Cinema halls in Andhra Pradesh and Telangana States. Now The Movie Collected rs 8 crores in Both states Box Office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil