»   »  வெறி வசூலைத் தொடரும் 'தெறி'... மிரண்டு ஓடும் 'வெற்றிவேல், மனிதன்'!

வெறி வசூலைத் தொடரும் 'தெறி'... மிரண்டு ஓடும் 'வெற்றிவேல், மனிதன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 வார முடிவில் விஜய்யின் 'தெறி' 8.76 கோடிகளை சென்னையில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

தெறிக்குப் பின் 'வெற்றிவேல்', 'மனிதன்' என 2 தமிழ்ப்படங்கள் வெளியாகி விட்டன. இதுதவிர ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என்று மற்ற மாநில படங்களும் சென்னையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றன.


இத்தனைப் படங்கள் வெளியாகியும் கூட 'தெறி' படத்தின் வசூலுக்கு முட்டுக்கட்டை போடமுடியவில்லை. தொடர்ந்து தெறி தாறுமாறாக வசூலித்து வருகிறதாம்.


தெறி

தெறி

3 வாரங்கள் முடிவில் விஜய்யின் 'தெறி' 8.76 கோடிகளை சென்னையில் மட்டும் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன்மூலம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் நம்பர் 1 இடத்தை இப்படம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தி ஜங்கிள் புக்

தி ஜங்கிள் புக்

ஹாலிவுட் படமான 'தி ஜங்கிள் புக்' 4 வார முடிவில் 2.64 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 164 கோடிகளை வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.


மனிதன்

மனிதன்

முதல் வார முடிவில் உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' 69.87 லட்சங்களை வசூலித்துள்ளது. நேர்மறையான விமர்சனங்களால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் முந்தைய படங்களை விட இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெற்றிவேல்

வெற்றிவேல்

விஜய்யின் 'தெறி'க்கு முன் சசிகுமாரின் 'வெற்றிவேல்' எடுபடவில்லை. 10 நாட்கள் முடிவில் வெறும் 51.25 லட்சங்களை மட்டுமே வசூல் செய்துள்ளது.


அல்லு அர்ஜுன், ஷாரூக்கான்

அல்லு அர்ஜுன், ஷாரூக்கான்

அல்லு அர்ஜுனின் 'சரைய்நோடு', ஷாரூக்கானின் 'பேன்' போன்ற பிறமொழிப்படங்கள் சென்னையில் தொடர்ந்து தடுமாறி வருகின்றன. 10 நாட்கள் முடிவில் 'சரைய்நோடு' 31.10 லட்சங்களையும், 3 வார முடிவில் 'பேன்' 78.29 லட்சங்களையும் சென்னையில் வசூலித்துள்ளது.


English summary
Box Office: In 3rd Weekend Vijay-Samantha Starrer Theri Collects Rs 8.76 Crore in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil