»   »  நஸ்ரியாவுக்காக அவரது கணவரின் படத்தை புறக்கணியுங்கள்: ரசிகை ஆவேசம்

நஸ்ரியாவுக்காக அவரது கணவரின் படத்தை புறக்கணியுங்கள்: ரசிகை ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நஸ்ரியாவை நடிக்கவிடாமல் வீட்டில் இருக்க வைத்துள்ள பஹத் பாசில் நடித்துள்ள மகேஷின்டே பிரதிகாரம் படத்தை புறக்கணிக்குமாறு இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நஸ்ரியா. வளர்ந்த பிறகு ஹீரோயினாக ஆனார். ஹீரோயினாக நடிக்க வந்த வேகத்தில் தனது நடிப்புத் திறமையால் மல்லுவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு சில படங்களில் நடித்திருக்கையில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நஸ்ரியா

நஸ்ரியா

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்காமல் வீட்டில் உள்ளார். அவர் விரைவில் நடிக்க வருவார் என்ற செய்தி மட்டும் மலையாள செய்தித்தாள்களில் அடிக்கடி வருகிறதே தவிர அவர் நடிப்பதாக தெரியவில்லை.

பஹத் பாசில்

பஹத் பாசில்

நஸ்ரியாவை அவரது கணவர் பஹத் பாசில் தான் நடிக்கவிடாமல் வீட்டில் வைத்துள்ளார். அதனால் ஆணாதிக்கம் மிக்க பஹத் நடித்து இன்று ரிலீஸாகியுள்ள மகேஷின்டே பிரதிகராம் படத்தை நான் புறக்கணிக்கிறேன். நீங்களும் புறக்கணியுங்கள் மக்களே என இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் தெரிவித்துள்ளார்.

வெயிட்

வெயிட்

நஸ்ரியா தற்போது வெயிட் போட்டு குண்டாக இருப்பதை வேறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து பஹத்திடம் இருந்து திட்டு வாங்கினர்.

தெரியுமா?

தெரியுமா?

இளம்பெண் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருப்பதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், நஸ்ரியாவை பஹத் தான் நடிக்க விடவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? அவர் கல்லூரியில் படிக்கலாம், வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம். ஏன் எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அவர்களை பற்றி எல்லாம் உங்களுக்கு அக்கறை இல்லையா என்று கேட்டுள்ளார்.

English summary
A fan has requested Mollywood fans to boycott Fahad's movie Maheshinte Prathikaram for Nazriya.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil