Boycott Kantara Chapter1: கன்னடத்தில் பேசியது ஒரு குத்தமா? சர்ச்சையில் சிக்கிய காந்தாரா இயக்குநர்!

சென்னை: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்டம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ஹைதராபாத் ப்ரோமோஷனின் போது நடிகர் ரிஷப் ஷெட்டி தெலுங்கில் பேசாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் படத்திற்கு எதிராக புறக்கணிப்புப் பிரச்சாரம் கிளம்பியுள்ளது.

ரிஷப் ஷெட்டி நடித்துள்ள கந்தாரா: அத்தியாயம் 1, இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் படம் அக்டோபர் 2ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில், சமூக வலைத்தளங்களில் படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை எதிர்க்கும் வகையில், 'கந்தாரா அத்தியாயம் 1 ஐ புறக்கணிப்போம்' என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது. இதற்குக் காரணம், பவன் கல்யாணின் லேட்டஸ்ட் படமான 'தே கால் ஹிம் OG' கர்நாடகாவின் பல பகுதிகளில், குறிப்பாக பெங்களூரில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

Kantara Chapter 1 Riship shetty 1
Photo Credit:

காந்தாரா சேப்டர் 1: இதனால், பவன் கல்யான் ரசிகர்கள், படம் திரையிடப்படாத திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாக, தெலுங்கு திரையுலகம் Boycott Kantara Chapter1 புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜூனியர் என்.டி.ஆருடன் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ரிஷப் ஷெட்டி தெலுங்கில் பேசாமல், "நான் கன்னடத்தில் தான் பேசுவேன், ஏனெனில் அப்போதுதான் என் இதயத்தில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும்," என்று ஜூனியர் என்.டி.ஆருடன் மேடையில் இருந்த ரிஷப் ஷெட்டி என்று பேசி இருந்தார். இதனால் ரசிகர்கள் அதிருபதியடைந்தனர்.

Boycott Kantara Chapter1: இந்தி மற்றும் தமிழில் ப்ரோமோஷனின் போது அந்தந்த மொழியில் பேசிய ரிஷப் ஷெட்டி, தெலுங்கில் மட்டும் ஏன் பேசவில்லை என்றும், தெலுங்கு ரசிகர்களை அவமதித்துவிட்டார். தெலுங்கு ப்ரோமோஷனின் போது தெலுங்கு மொழியில் பேசாமல் கன்னட மொழியில் பேசி ரசிகர்களை அவமதித்துள்ளதாகவும் இதனால் காந்தாரா படக்குழு ரசிகர்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும், காந்தாரா படத்தை புறக்கணிக்கச் சொல்லி தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் BoycottKantaraChapter1 என்கிற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். கந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படம், முன்பதிவிலேயே இந்தியாவில் ₹4.2 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த முன்பதிவுத் தொகையானது, 2022 ஆம் அண்டு வெளியான முதல் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: kantara chapter 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X