twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்ஆர்ஆர் படத்துக்கு வந்த திடீர் சிக்கல்.. கர்நாடகாவில் படத்தை தடை செய்ய கிளம்பிய போராட்டம்!

    |

    பெங்களூரு: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    இந்தியாவின் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு எதிராக கர்நாடகா ரசிகர்கள் திடிரென BoycottRRRinKarnataka என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் கலந்து கொண்டு படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருந்தார்.

    வருங்கால கணவருக்காக வேறலெவலில் வேலை செய்த நம்பர் நடிகை.. அந்த படம் எப்படி கிடைத்தது தெரியுமா?வருங்கால கணவருக்காக வேறலெவலில் வேலை செய்த நம்பர் நடிகை.. அந்த படம் எப்படி கிடைத்தது தெரியுமா?

    மார்ச் 25 ரிலீஸ்

    மார்ச் 25 ரிலீஸ்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் இந்த படம் ரிலீஸ் ஆகப் போகிறது.

    திடீர் டிரெண்டிங்

    திடீர் டிரெண்டிங்

    ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்க உலக ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கர்நாடக ரசிகர்கள் அந்த படத்தை கர்நாடகாவில் ஒரு தியேட்டரில் கூட ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் படத்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் #BoycottRRRinKarnataka என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    தடை செய்ய வேண்டும்

    தடை செய்ய வேண்டும்

    இதுவரை செல்லும் இடங்களில் எல்லாம் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்து வந்த RRR படத்துக்கு தற்போது திடீரென இப்படியொரு தடை செய்ய வேண்டும் என்கிற எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம் என்பதற்கும் தெளிவாக விளக்கம் கொடுத்து விளாசி வருகின்றனர் கன்னட இளைஞர்கள். மேலும், ஆர்ஆர்ஆர் படத்தை வரவேற்கும் கர்நாடக முதல்வரையும் அவர்கள் விடவில்லை.

    முதுகு தண்டு இல்லை

    முதுகு தண்டு இல்லை

    கன்னட நடிகர்களுக்கு இதை தட்டிக் கேட்க முதுகு தண்டு இல்லை என்றாலும், கன்னட இளைஞர்கள் நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம் என ஆர்ஆர்ஆர் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதை எதிர்த்து சூடான பிரச்சாரத்தை இளைஞர்கள் செய்ய என்ன காரணம் தெரியுமா?

    கன்னட மொழியில் இல்லை

    கன்னட மொழியில் இல்லை

    ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கன்னட ரசிகர்கள் இப்படி எதிர்க்க என்ன காரணம் என்றால், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கன்னட மொழியில் உருவாகாதது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். கன்னட மொழியை புறக்கணித்து விட்டு பான் இந்தியா படமென ராஜமெளலி பிரச்சாரம் செய்வதால் கன்னடர்கள் இந்த படத்திற்கு எதிரான எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றனர்.

    கேஜிஎஃப் 2வுக்கு சிக்கல்

    கேஜிஎஃப் 2வுக்கு சிக்கல்

    ஆர்ஆர்ஆர் படத்தை இந்த மாதம் எதிர்த்தால் அடுத்த மாதம் வெளியாக உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படத்துக்கு மற்ற மாநிலங்களில் இதே போன்ற எதிர்ப்பு வந்து ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என கேஜிஎஃப் 2 ரசிகர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்காமல் கன்னட மொழியிலும் படத்தை ரிலீஸ் பண்ணுங்க என கோரிக்கை வைக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.

    Recommended Video

    Jr.NTR -கு Time Sense இல்லை Rajamouli Speech in RRR grand Pre-Release event
    புனீத் ராஜ்குமார் ரசிகர்கள்

    புனீத் ராஜ்குமார் ரசிகர்கள்

    மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், அந்த படம் ஓடும் அனைத்து தியேட்டர்களையும் மார்ச் 25ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் சூறையாடி விடும் என்பதால் தான் இந்த டிரெண்டிங்கை புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இயக்குநர் ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் 18க்கு பதிலாக மார்ச் 25க்கு தள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SS Rajamouli’s Pan India movie RRR not released in Kannada language stirs the protest among Kannadigas and they trending BoycottRRRinKarnataka in Twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X