திடீரென டிரெண்டான BoycottVikramVedha ஹாஷ்டேக்.. பொன்னியின் செல்வனுக்கு பாலிவுட் ரசிகர்கள் ஆதரவு!

மும்பை: இந்த ஆண்டு பாலிவுட் படங்களுக்கு #BoycottBollywood சிம்ம சொப்பனாக விளங்கி வந்த நிலையில், தற்போது #BoycottVikramVedha என்கிற ஹாஷ்டேக் விக்ரம் வேதா படத்துக்கு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை பாலிவுட்டில் அதே பெயரில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கானை வைத்து புஷ்கர் காயத்ரி இயக்கி உள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை பொன்னியின் செல்வன் படத்துக்கு பாலிவுட்டில் டஃப் போட்டியே இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வனுக்கு போட்டி

பொன்னியின் செல்வனுக்கு போட்டி

கோலிவுட்டில் தனுஷின் நானே வருவேன் படம் போட்டியாக வெளியாக உள்ள நிலையில், பாலிவுட்டில் பெரிய போட்டியாக இன்னொரு தமிழ் இயக்குநர்களின் படமே உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கும் ரீமேக் படமான விக்ரம் வேதா படத்துக்கும் வரும் வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் ஏற்படும் என எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.

பாய்காட் விக்ரம் வேதா

பாய்காட் விக்ரம் வேதா

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவாக ஹ்ரித்திக் ரோஷன் ட்வீட் போட்ட உடனே #BoycottVikramVedha ஹாஷ்டேக்கை போட்டு பாலிவுட் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். ஆனால், அதன் பிறகு விக்ரம் வேதா டீசர், டிரைலர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது மீண்டும் அந்த நெகட்டிவ் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சைஃப் அலி கான் தான் காரணம்

சைஃப் அலி கான் தான் காரணம்

திடீரென இந்த டிரெண்ட் ஆரம்பிக்க காரணமே விக்ரம் வேதா படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தான் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். தொடர்ந்து இந்துக்களை அவமதித்து வருகிறார் இஸ்லாமிய நடிகரான சைஃப் அலி கான் என கமெண்ட்டுகள் பறக்கின்றன. பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திலும் சைஃப் அலி கான் தான் ராவணனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வனுக்கு ஆதரவு

பொன்னியின் செல்வனுக்கு ஆதரவு

இந்து கலாசாரத்தை பற்றி அருமையாக பேசிய சியான் விக்ரமின் வீடியோவை ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் மோதல் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய புரமோஷன் இல்லை

பெரிய புரமோஷன் இல்லை

அதே நேரத்தில் விக்ரம் வேதா படத்துக்கு நாடு முழுவதும் பெரிய புரமோஷனை படக்குழு செய்யவில்லை என்றும் பொன்னியின் செல்வன் படத்துக்கே ரசிகர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாஸ்திரம் திரைப்படம் பாய்காட் பாலிவுட் பிரச்சாரத்தில் இருந்து தப்பித்த நிலையில், விக்ரம் வேதாவும் அதே போல தப்பித்து ஹிட் அடிக்கும் என்று ஹ்ரித்திக் ரோஷன் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X