»   »  13 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையில் இணையும் 'பாய்ஸ்'

13 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையில் இணையும் 'பாய்ஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 13 வருடங்களுக்குப்பின் பாய்ஸ் குழு மீண்டும் இணையப் போவதாக இசையமைப்பாளர் தமன் அறிவித்திருக்கிறார்.

கடந்த 2003 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். சித்தார்த், நகுல், தமன், ஜெனிலியா, பரத் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் இப்படம் வெளியானது.

Boys Team Reunited after 13 Years

இதில் ஜெனிலியா திருமணம் முடிந்து செட்டிலாகி விட்டார். சித்தார்த், நகுல் இருவரும் பிஸியான நடிகர்களாக மாறிவிட்டனர்.

தமன் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்நிலையில் 13 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தமன் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தமன் " பாய்ஸ் டீம் 13 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் இணையப் போகிறோம். இதுகுறித்த முழுமையான தகவல்கள் விரைவில்" என்று கூறியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் சித்தார்த், நகுல் நாயகனாக நடிக்க தமன் அப்படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Thaman Tweeted "Boys reunion goona be back on silver screen after 13 years if everything goes as per plan details Very soon Actor_Siddharth Actor_Nakul".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil