»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தில் இன்னும் சில ஆபாச காட்சிகள் இருக்கின்றன. அவற்றை 1 வாரத்துக்குள் நீக்காவிட்டால்போராட்டத்தில் இறங்குவோம் என்று கெடு விதித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தற்போது வெளிவரும் தமிழத் திரைப்படங்கள் தமிழ்ப்பண்பாட்டையும் கலாச்சாரத்ததையும் சீரழிக்கும் வகையில்உள்ளன. மிதமிஞ்சிய ஆபாசமும், அரிவாள் கலாச்சாரமும், சாதிப் பிரச்சினைகளும்தான் இடம் பெற்றுள்ளன.பாடல்களும் வசனங்களும் இரட்டை அர்த்தம் கற்பிக்கின்றன.

பாய்ஸ் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை தானே பார்த்து நீக்கி விடுவதாகதயாப்பாளர் ரத்னம் கூறியிருந்தார். ஆனால் அதுபோல அவர் செய்யவில்லை. பெயருக்கு சில காட்சிகளை வெட்டிவிட்டு ஆபாசம் மற்றும் அருவருப்பான வசனங்களுடன் படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒரு வார அவகாசம் கொடுத்து இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். அதற்குள் சர்ச்சைக்குரிய காட்சிகளைஅவர் நீக்காவிட்டால், மாநிலம் முழுவதிலும் பாய்ஸ் படம் ஓடும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்துவோம்.படத்தை திரையிட விட மாட்டோம்.

படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம். தமிழக அரசு இதுபோன்ற ஆபாசப்படங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil