»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாய்ஸ் படத்தில் அளவுக்கு அதிகமாக ஆபாச காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பதால் அந்தப்படத்தைத் தடை செய்ய வேண்டும், மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரி சில ரிட் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல்செய்துள்ளார். அதில், பாய்ஸ் படத்திற்குக் கொடுக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெற தணிக்கைவாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மற்ற மனுக்களோடு இந்த மனுவும் சேர்த்துவிசாக்கப்படவுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil