»   »  கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்!

கின்னஸ் சாதனை படைத்த காமெடி நடிகர் பிரம்மானந்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரம்மானந்ததிற்கு அதிக அளவில் படம் நடித்தற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

தெலுங்கு சினிமா உலகின் அசைக்க முடியாத காமெடி நடிகர் பிரம்மானந்தம். 60 வயதாகும் பிரம்மானந்தம் 1980களில் அறிமுகமாகி இன்று வரை நடித்து வருகிறார். என்.டி.ராமராவ் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை அனைவருடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி வருகிறார் பிரம்மானந்தம்.

Brahmanandam holds Guinness record

இவர், படத்தில் 10 நிமிடம் தலையை காட்டினால் போதும் படம் ஹிட் தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றவர். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாது காணப்படுவார்.

இந்நிலையில் அதிக படங்களில் நடித்து சாதனை செய்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார் பிரம்மானந்தம். 30 ஆண்டுகளில் கிட்டதட்ட 1000 படங்களில் நடித்திருக்கிறார். அதற்காக கின்னஸ் அவரை கெளரவப்படுத்தியுள்ளது.

மேலும், தனது சுயசரிதையையும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அது வெளிவந்தால் தெலுங்கு சினிமா சரித்திரமாக இருக்கும் என்று தெலுங்கு சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

முன்னதாக 2009 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளார். தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

English summary
ACtor Brahmanandam holds Guinness World Record for the most screen credits for a living actor
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil